ரூ.10,000 விலை குறைந்த பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கின் விபரம்

0

பெனெல்லி இம்பீரியல் 400

ரெட்ரோ ஸ்டைல் பெற்ற பெனெல்லி நிறுவனத்தின் இம்பீரியல் 400 பைக்கின் விலையை ரூ.10,000 வரை குறைத்துள்ளதால் தற்போது விலை ரூ.1.89 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

Google News

விலை குறைப்பிற்கு முக்கிய காரணமாக பெனெல்லி குறிப்பிடுகையில், உள்நாட்டில் உதிரிபாகங்கள் தயாரிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பில் முன்னேற்றம் என குறிப்பிட்டுள்ளது.

இம்பீரியல் 400 மாடலில்  373.5 சிசி ஒற்றை சிலிண்டர் SOHC என்ஜினை பெற்று 21 பிஹெச்பி அதிகபட்ச சக்தியையும் 28 என்எம் டார்க்கையும் வழங்குகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

பெனெல்லி இம்பீரியல் 400 போட்டியாளர்கள்

கிளாசிக் பைக்குகளுக்கு இணையான ஸ்டைலை பெற்ற இம்பீரியல் 400 மாடலுக்கு சவாலாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, ஜாவா, ஜாவா 42 , மற்றும் ஹோண்டா ஹெனெஸ் சிபி 350 ஆகியவை உள்ளது.