பெனெல்லி லியோன்சினோ 250 பைக் விற்பனைக்கு அறிமுகமானது

Benelli Leoncino 250

இந்திய சந்தையில் பெனெல்லி நிறுவனத்தின் புதிய லியோன்சினோ 250 விற்பனைக்கு ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. முன்பாக லியோன்சினோ 500 மாடல் வெளியிடப்பட்டது. மேலும், இம்மாத இறுதியில் இம்பீரியல் 400 பைக் விற்பனைக்கு வரவுள்ளது.

தொடக்க நிலை ஸ்கிராம்பளர் மாடலாக வந்துள்ள லியோன்சினோ 250 மாடலில் 249 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின், லிக்யூட் கூலிங் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் அதிகபட்சமாக 25.8 bhp  பவர் மற்றும் 21 Nm  டார்க்கை வெளிப்படுத்துகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

ஸ்டீல் டீயூப் ட்ரெல்லிஸ் ஃபிரேமில் வடிவமைக்கப்பட்டு முன்பக்கத்தில் 41 mm USD ஃபோர்க் 17 இன்ச் அலாய் வீல்கள் கொண்டு, பின்பக்கத்தில் மோனோஷாக் மற்றும் பிரேக்கிங் திறனில் 280 mm டிஸ்க் மற்றும் டிஸ்க் 240 மிமீ பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் வந்துள்ளது.

எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குடன் கூடிய வட்ட வடிவ ஹெட்லேம்ப் கொண்டு எல்.சி.டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் விளங்குகின்றது. மேலும், லியோன்சினோ 500 மாடலின் தோற்ற அமைப்பிலே வடிவமைக்கப்பட்டு ஸ்டைலான 12.5 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு பெற்றுள்ளது. இதன் பின்புற டெயில் பகுதியில் எல்இடி டெயில் லேம்ப் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்களும் உள்ளன.

Benelli Leoncino 250

இந்தியாவில் பெனெல்லி லியோன்சினோ 250 மாடலின் விலை 2.50 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது டீலர்கள் வாயிலாக முன்பதிவு கட்டணமாக ரூ.6,000 வசூலிக்கப்படுகின்றது. நவம்பர் முதல் டெலிவரி தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

benelli leoncino 250 instrumentation benelli leoncino 250 rear