ரூ.60,000 விலை குறைக்கப்பட்ட பெனெல்லி TNT 300, 302R பின்னணி என்ன.?

0

பெனெல்லி TNT 300

புதிதாக மஹாவீர் குழுமத்துடன் இணைந்து தனது விற்பனையை பெனல்லி தொடங்கியுள்ள நிலையில் ரூ.51,000 வரை விலையை பெனெல்லியின் TNT 300, ஃபேரிங் ரக 302R பைக்கின் விலையும் ரூ.60,000 வரை குறைத்துள்ளது.

முன்பாக டிஎஸ்கே குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் செயல்பட்டு வந்த பெனெல்லி, டிஸ்கே நிதி பற்றாக்குறையால் தனது ஆதரவினை நிறுத்திக் கொண்டது. அதன் பிறகு தற்போது மஹாவீர் குழுமத்துடன் இணைந்து ஹைத்திராபாத் அருகில் புதிய சிகேடி முறையிலான ஆலையை தொடங்கியுள்ளது.

பெனெல்லி TNT 300, 302R

முழுதும் அலங்கரிகப்பட்ட மாடலான 302ஆர் மற்றும் நேக்டு வெர்ஷன் டிஎன்டி 300 என இரு பைக்குகளிலும் 38 hp பவர் , 27 Nm டார்க் வெளிப்படுத்தும் லிக்யூடு-கூல்டு 300சிசி பேரலல் ட்வீன் என்ஜின் பொருத்தப்பட்டு 6 வேக கியர்பாக்ஸ் வழியாக சக்கரங்களுக்கு ஆற்றலை எடுத்துச் செல்கின்றது.

புதிய பெனெல்லி TNT 300 விலை ரூபாய் 2.99 லட்சம் (முன்பு ரூ.3.50 லட்சம் ) மற்றும் 302R விலை ரூபாய் 3.10 லட்சம் (முன்பு ரூ.3.70 லட்சம் ) (எக்ஸ்-ஷோரூம் விலை )

கவாஸாகி நின்ஜா 300, டிவிஎஸ் அப்பாச்சி RR310, கேடிஎம் 390 டியூக் போன்ற மாடல்களுடன் பிஎம்டபிள்யூ G 310 R பைக்கினையும் எதிர்கொள்கின்றது.

பெனெல்லி TNT 302R