பி.எம்.டபிள்யூ G 310 R, பி.எம்.டபிள்யூ G 310 GS அறிமுக தேதி விபரம்

0

இந்தியாவில் பி.எம்.டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் குறைந்த விலை பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள்களான ஸ்போர்ட்டிவ் ரக பி.எம்.டபிள்யூ G 310 R மற்றும் அட்வென்ச்சர் ரக பி.எம்.டபிள்யூ G 310 GS ஆகிய இரு மாடல்களும் ஜூலை 12ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது

பி.எம்.டபிள்யூ G 310 R

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துடன் இணைந்து பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனம் குறைந்தபட்ச சிசி கொண்ட மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், ஜி 310 ஆர் பைக்கின் அடிப்படையில் உருவான முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி RR310 பைக்கினை ரூ.2.13 லட்சத்தில் விற்பனை செய்து வருகின்ற நிலையில், டீலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎம்டபிள்யூ திட்டமிட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக முந்தைய பி.எம்.டபிள்யூ பைக் உரிமையாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ரூ.50,000 முன்பணமாக பெற்று முன்பதிவு செய்யப்படுகின்றது.

Google News

பிஎம்டபிள்யூ நேக்டு ஸ்போர்ட்டிவ் மோட்டார்சைக்கிளான ஜி310 ஆர் பைக்கில் பைக்கில் 34 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 313 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 28Nm பெற்றுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மற்றொரு அட்வென்ச்சர ரக ஜிஎஸ் மாடலிலும் இதே 313சிசி எஞ்சின் இடம்பெற்றுள்ளது.

ரூ. 2.85 லட்சத்துக்கு குறைந்த விலையில் பிஎம்டபிள்யூ G 310 R மற்றும் ரூ. 3.25 லட்சத்தில் பிஎம்டபிள்யூ G 310 GS ஆகிய இரு பைக்குகளும் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், அதிகார்வப்பூர்வமான விற்பனைக்கு ஜூலை 12ந் தேதி வரவுள்ளதாக இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

mw