Automobile Tamil

BS-VI யமஹா எம்டி-15 என்ஜின் விபரம் வெளியானது

BS-VI Yamaha MT-15

2020 யமஹா எம்டி-15 பைக்கில் இடம் பெற உள்ள பாரத் ஸ்டேஜ் 6 (BS-VI) மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜின் பவர் விபரம் வெளியானது. கடந்த டிசம்பரில் ஃபேசினோ அறிமுகத்தின் போது வெளியிடப்பட்ட எம்டி-15 விற்பனைக்கு பிப்ரவரி மாதம் கிடைக்கலாம்.

விற்பனைக்கு கிடைக்கின்ற யமஹா YZF-R15 பிஎஸ்6 என்ஜினை விட குறைவான பவரை வெளிப்படுத்தும் எம்டி-15 பிஎஸ்6 மாடலில் 10,000 ஆர்.பி.எம்-ல் 18.2 ஹெச்பி பவரையும், டார்க் 14.1 Nm ஆக விளங்குகின்றது. இதில் ஆறு வேக கியர்பாக்ஸுடன் சிலிப்பர் கிளட்ச் பெற்ற என்ஜின் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது. மற்றபடி அளவுகளில் எந்த மாற்றமுமில்லை.

சைடு ஸ்டாண்டு உள்ள சமயத்தில் என்ஜின் இன்ஹைபிட்டர், பின்புறத்தில் ரேடியல் டயர் வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு சந்தைகளில் கிடைக்கின்ற புதிய நிறம் ஐஸ் ஃப்ளூ வெர்மிலான் பெற்றதாக வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிற கலவை பிளாக் இன்ஷர்ட் போன்றவை பெற்றதாக அமைந்துள்ளது.

பிஎஸ்4 மாடலை விட ரூ.4.000 முதல் ரூ.5,000 வரை விலை உயர்த்தப்படலாம். தற்போது விற்பனையில் கிடைக்கின்ற பிஎஸ்4 யமஹா எம்டி-15 பைக்கின் விலை ரூ.1.36 லட்சம் ஆகும்.

Exit mobile version