Automobile Tamil

பிஎஸ்-6 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் வரிசை விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் டுகாட்டி நிறுவனத்தின் ஸ்கிராதம்பளர் வரிஐயில் இடம்பெற்றுள்ள ஐகான், ஐகான் டார்க் மற்றும் 1100 டார்க் புரோ என மூன்று பைக்குகளில் பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு இணையான இன்ஜினை பெற்றதாக விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

முன்பாக இந்நிறுவனம், பனிகேல் வி2 மற்றும் மல்டிஸ்ட்ராடா 950 எஸ் என இரு மாடல்களையும் விற்பனைக்கு வெளியிட்டிருந்தது.

2021 ஸ்க்ராம்ப்ளர் ஐகான் மற்றும் ஐகான் டார்க்

இந்தியாவுக்கான டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் ரேஞ்சில், ஐகான் மற்றும் ஐகான் டார்க் என இரு மாடல்களை கொண்டுள்ளது. இந்த பைக்குகள் 803 சிசி, ஏர் கூல்டு, எல் ட்வின் எஞ்சின் மூலம் இயக்கப்பட்டு அதிகபட்சமாக பவர் 73 ஹெச்பி 8,250 ஆர்.பி.எம் மற்றும் 66.2 என்எம் டார்க்கை 5,750 ஆர்.பி.எம்-ல் வெளிப்படுத்துகின்றது. இயந்திரத்தைத் தவிர, புதிய பிஎஸ்-6 இன்ஜின் தவிர, மேம்பட்ட சஸ்பென்ஷன் செட்-அப் ஆகியவை கொண்டுள்ளது., மேலும் ஸ்க்ராம்ப்ளர் 1100 பைக்கிலிருந்து பெறப்பட்ட ஸ்டைல் உட்பட புதிய அலுமினியம் 10 ஸ்போக் சக்கரங்களும் கொண்டதாக வந்துள்ளது.

2021 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 டார்க் புரோ

அடுத்தப்படியாக, டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 டார்க் புரோ மாடலில் 1,079 சிசி, ஏர்-கூல்ட், எல்-ட்வின் மூலம் இயக்கப்பப்பட்டு 7,500 ஆர்.பி.எம்-ல் அதிகபட்சமாக 86 ஹெச்பி மற்றும் 4,750 ஆர்.பி.எம் மணிக்கு 88 என்எம் டார்க்கை வழங்குகிறது. புதிய ஸ்க்ராம்ப்ளர் புரோ ஒரு திருத்தப்பட்ட எக்ஸ்ஹாஸ்ட் அமைப்பையும் பெறுகிறது. ஸ்டைலிங் மற்றும் உபகரணங்களைப் பொறுத்தவரை, டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் 1100 ப்ரோ மாடல்கள் மேம்பட்ட இருக்கை மற்றும் மாற்றியமைக்கப்பட்ட நம்பர் பிளேட் ஹோல்டரைப் பெறுகின்றன.

Ducati Scrambler Icon – ரூ. 8.49 லட்சம்

Ducati Scrambler Icon Dark – ரூ. 7.99 லட்சம்

Ducati Scrambler 1100 Dark Pro – ரூ. 10.99 லட்சம்

(எக்ஸ்ஷோரூம்)

Exit mobile version