புதிய ஹீரோ கிளாமர் 125 பைக் விற்பனைக்கு வெளியானது.., விலை ரூ.68,900

hero glamour

பிரசத்தி பெற்ற புதிய கிளாமர் 125 பைக்கின் பிஎஸ்6 என்ஜின் பெற்ற மாடலை பல்வேறு மாற்றங்களுடன் புதிய வசதிகளை கொண்டதாக ரூ.68,900 விலையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

முந்தைய பிஎஸ்4 மாடலை விட பல்வேறு வகையில் புதிய கிளாமர் 125 பைக் புதுப்பிக்கப்பட்டு புதிய ஹெட்லட், பேனல் உட்பட பக்காவாட்டிலும் உள்ள பேனல்கள் அனைத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ் 6 கிளாமரில் புதிய கிளஸ்டர் கருவி இணைக்கப்பட்டு நிகழ்நேர எரிபொருள் சிக்கனத்தை அறியும் அம்சத்தைக் கொண்டுள்ளது. கூடுதலாக இம்முறை புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் கொண்டதாகவும், அதே நேரத்தில் சிவப்பு, நீலம், கிரே மற்றும் ஸ்போர்ட்ஸ் சிவப்பு என நான்கு நிறங்களை பெற்றுள்ளது.

முன்பாக கிடைத்த மாடலுக்கு மாற்றாக புதிய சேஸை பெறுகின்றது. அகலமான டயர்கள், சஸ்பென்ஷன் அதிகபட்ச டிராவல் (முன்பக்கத்தில் +14 சதவீதம் மற்றும் பின்புறத்தில் +10 சதவீதம்) மற்றும் கிரவுண்ட் கிளியரண்ஸ் (+30 சதவீதம்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

முந்தைய 4 கியர்பாக்ஸ் என்ஜின் மாற்றப்பட்டு தற்போது 5 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ள கிளாமர் பைக்கில் 125cc மோட்டார் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7,500rpm-ல் 10.73bhp பவரும், 6,000rpm-ல் 10.6Nm டார்க்கையும் வழங்குகின்றது. ஐ3எஸ் நுட்பத்தினை கொண்டுள்ள இந்த மாடல் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் எளிதாக சவாரி செய்ய, இப்போது ஆட்டோ சாய்ல் அம்சத்தையும் பெறுகின்றது.

bs6 Hero glamour  ரூ .68,900 (drum)

bs6 hero glamour ரூ. 72,400 (disc)

(எக்ஸ்-ஷோரூம், டெல்லி).