புதிய ஹோண்டா கிரேஸியா 125 விற்பனைக்கு அறிமுகமானது

பிஎஸ்-6 125சிசி இன்ஜின் பெற்ற ஹோண்டா கிரேஸியா 125 ஸ்கூட்டர் ரூ.77,126 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது.

0
  • புதிய ஹோண்டா கிரேஸியா 125 ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.77,126
  • 125சிசி இன்ஜின் அதிகபட்சமாக 8.1 bhp பவர் மற்றும் 10.3 NM டார்க் வழங்குகின்றது.
  • டிஜிட்டல் கிளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட் பெற்றுள்ளது.
ஹோண்டா கிரேஸியா 125
பிஎஸ்-6 ஹோண்டா கிரேஸியா 125

ரூ.77,126 விலையில் புதிதாக மேம்படுத்தப்பட்ட பிஎஸ்-6 இன்ஜின் பெற்ற ஹோண்டா கிரேஸியா 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. முந்தைய கிரேஸியாவை விட பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்டு ரூ.10,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஹோண்டாவின் eSP (Enhanced Smart Power) நுட்பத்தின் மூலம் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்ட என்ஜினை பெற்றுள்ளது. இந்த நுட்பம் PGM-FI, குறைந்த உராய்வு மற்றும் ACG ஸ்டார்டர் என மூன்று அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

Google News

புதிய ஹோண்டா கிரேஸியா 125 ஸ்கூட்டரில் இந்நிறுவனத்தின் ஆக்டிவா 125 இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. சிறப்பான செயல்திறன் மிக்கதாக விளங்கும் வகையில் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 124 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 8.14 hp பவர் மற்றும் 10.3 NM டார்க் வழங்குகின்றது.

முழுமையான டிஜிட்டல் கன்சோலை பெற்றுள்ள கிரேசியாவில் மூன்று ஸ்டெப் ஈக்கோ ஸ்பீடு இன்டிகேட்டர், இருபுறங்களிலும் பார் டைப் டாக்கோமீட்டர், கடிகாரம், நிகழ் நேர எரிபொருள் இருப்பிற்கான மைலேஜ், இரண்டு டிரீப்மீட்டர், ஓடோமீட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

கிரேசியா 125 மாடலின் முன்பக்கம் டெலிஸ்கோபிக் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பர், பின்புறத்தில் டிரம் பிரேக் மற்றும் முன்புறத்தில் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு காம்பி பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. 10 அங்குல பின்புற அலாய் வீல் மற்றும் 12 அங்குல அலாய் வீல் முன்புறமும்,  ஸ்டைலிஷான எல்இடி ரன்னிங் விளக்கு, எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட் இணைக்கப்பட்டிருக்கும்.

வெளிப்புறத்தில் பெட்ரோல் நிரப்பிக் கொள்ளும் வசதி, ஐ.எஸ்.எஸ் (Idling stop system) என்ற வசதி மூலமா ஐடியல் சமயங்களில் தானாகவே வாகனம் அனைந்து விடும், இதனால் சிறப்பான மைலேஜ் பெற உதவும். இந்த வசதி ஹீரோவின் ஐ3எஸ் போன்றதாகும். புதிய க்ளோவ் பாக்ஸ், சைடு ஸ்டாண்டு உள்ள சமயங்களில் என்ஜின் ஆன் செய்வதனை தடுக்கும் அமைப்பும் பெற்றுள்ளது.

புதிய ஹோண்டா கிரேஸியா 125 ஸ்கூட்டர் ஆரம்ப விலை ரூ.77,126 மற்றும் டீலக்ஸ் டாப் வேரியண்ட் ரூ.84,192 ஆகும்.

(எக்ஸ்ஷோரூம் சென்னை)