பிஎஸ்-6 ஜாவா, ஜாவா 42 பைக்குகளின் என்ஜினில் எந்த மாற்றமும் இல்லை

0

jawa-and-jawa-forty-two-bike

ஏப்ரல் 2020க்கு முன்பாக பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான என்ஜினை பெற்ற ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளை வெளியிட உள்ள ஜாவா மோட்டார் சைக்கிள் நிறுவனம் தொடர்து தற்பொழுது பயன்பாட்டில் உள்ள 293சிசி என்ஜினே இடம் பெற்றிருக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான ஜாவா பெராக் பைக்கில் இடம்பெற்ற பவர்ஃபுல்லான 334சிசி என்ஜின் ஆனது ஜாவா, ஜாவா 42 பைக்குகளில் இடம்பெறாலாம் என சில முன்னணி ஆட்டோமொபைல் இணையதளங்கள் செய்தி வெளியிட்ட நிலையில் இதனை முற்றிலும் மறுத்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக ஜாவா மோட்டார் சைக்கிள் உறுதி செய்துள்ளது.

பெராக்கில் பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான 334 சிசி என்ஜின் அதிகபட்சமாக 31 ஹெச்பி பவர் மற்றும் 31 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் பிரத்தியேகமாக பெராக் மாடலில் மட்டும் இடம்பெற்றிருக்குமாம்.

jawa twi

மற்றபடி, தற்பொழுது இடம்பெற்றுள்ள ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளில் இரண்டு குழல் பெற்ற புகைப்போக்கி கொண்ட 293 சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 bhp பவரையும், 28 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இதே என்ஜின் பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு மாற்றப்பட உள்ளது.