Automobile Tamilan

பிஎஸ் 6 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்கின் சிறப்புகள்

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350

இந்தியாவின் முதன்மையான ரெட்ரோ ஸ்டைல் மாடலாக விளங்குகின்ற ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளில் பாரத் ஸ்டேஜ் 6 மாசு விதிகளக்கு உட்பட்டதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. விற்பனையில் கிடைக்கின்ற மாடலை விட ரூ.11 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

நமது நாட்டில் ஏப்ரல் 1, 2020 முதல் சுற்றுச்சூழல் மாசு பாதிப்புகளை வெகுவாக குறைக்கின்ற புதிய பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணைக்கமான என்ஜின் பெற்ற கார் மற்றும் பைக்குகள் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ள நிலையில், ராயல் என்ஃபீல்டின் முதல் பிஎஸ்6 என்ஜினை பெற்றதாக விற்பனைக்கு கிளாசிக் 350 கிடைக்க துவங்கியுள்ளது. புதிதாக சோதனை செய்யப்பட்டு வந்த கிளாசிக், தண்டர்பேர்டு மாடல் விற்பனைக்கு வர அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் தேவைப்பட உள்ளதால், விற்பனைக்கு கிடைத்து வந்த யூசிஇ என்ஜின் அடிப்படையிலே எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் முறையை கொண்டு பிஎஸ்6-க்கு என்ஃபீல்டு மாற்றியுள்ளது.

மேலும், இந்நிறுவனம் தனது 500சிசி என்ஜின் கொண்ட மாடல்களை இந்திய சந்தையிலிருந்து பிஎஸ் 6 என்ஜினுக்கு மாற்றப்படமால் கைவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அதனை உறுதி செய்யும் வகையில் புல்லட் 500, தண்டர்பேர்டு 500 மாடல்களுக்கான முன்பதிவை நிறுத்தியுள்ளது. இது தவிர புல்லட் ட்ரையல்ஸ் பைக்கிற்கான முன்பதிவும் நீக்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டின் கிளாசிக் 500சிசி சந்தையில் இடம்பெற்று வந்த பிரத்தியேக க்ரோம் எடிஷன் மற்றும் ஸ்டெல்த் பிளாக் நிறங்களை கொண்டு வந்துள்ளதால், 350சிசி பிரியர்களுக்கு மத்தியில் நல்லதொரு வரவேற்பினை பெறுவதற்கு வாய்ப்பாக அமையும் என கருதப்படுகின்றது.

பிஎஸ் 6 கிளாசிக் 350 EFI என்ஜின் விபரம்

தற்போது விற்பனையில் கிடைத்து வந்த கார்புரேட்டர் பிஎஸ் 4 ஆதரவு பெற்ற UCE என்ஜினை பின்பற்றி பிஎஸ்-6 ஆக மாற்றப்பட்டுவதனால் எலக்ட்ரானிக் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் (EFi – Electronic fuel injection) முறையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறப்பான முறையில் எரிபொருளை தெளிப்பதனால் மைலேஜ் மற்றும் செயல்திறன் கனிசமாக உயரக்கூடும். பிஎஸ் 6 முறைக்கு மாற்றப்பட்டதால் கேட்டிலிட்டிக் கன்வெர்ட்டர், ஆக்சிஜன் சென்சார் மற்றும் வெப்பத்தை உணருகின்ற வெப்ப சென்சார் பெற்றுள்ளது.

கிளாசிக் EFi 350 மாடலின் பவர் மற்றும் டார்க் விபரங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. அனேகமாக, முன்பாக வெளிப்படுத்தி வந்த 19.8 hp பவரை விட சற்று குறைவானதாக இருக்கலாம். மற்றபடி டார்க்கில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 28Nm வெளிப்படுத்தக்கூடும். மற்றபடி தொடர்ந்து 5 வேக கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டுள்ளது. எஃப்ஐ என்ஜினாக மாற்றப்பட்டுள்ளதால் மைலேஜ் சற்று அதிகரித்திருக்க வாய்ப்புகள் உள்ளது.

என்னென்ன மாற்றங்கள்

புதிதாக வந்துள்ள நிறங்களான ஸ்டெல்த் பிளாக், க்ரோம் பிளாக் மாடல்களை மற்ற நிறங்களான சிக்னல்ஸ் பதிப்புகளான ஸ்ட்ரோம் ரைடர், ஏர்புரோன் ப்ளூ போன்றவற்றுடன் கிளாசிக் பிளாக் மற்றும் கன்மெட்டல் கிரே நிறங்களை கொண்டுள்ளது. இந்த மாடல்களில் குறிப்பாக ஸ்டெல்த் பிளாக், க்ரோம் பிளாக்கில் மட்டும் அலாய் வீல் மற்றும் டியூப்லெஸ் டயர் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் வழக்கமான சஸ்பென்ஷன் அமைப்பே தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன், 280 மீமீ டிஸ்க் பிரேக்கையும், பின்புற டயரில் 240 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் ட்வீன் ஷாக் அப்சார்பர் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ் 4 Vs பிஎஸ் 6 கிளாசிக் 350 மாடலின் வித்தியாசங்கள்

வாரண்டி விபரம்

கூடுதலாக பிஎஸ் 6 கிளாசிக் 350 பைக்குகளுக்கு மூன்று வருட வாரண்டி மற்றும் மூன்று வருட சாலையோர உதவி (RSA) வசதியை வழங்குவதாக அறிவித்துள்ளது.

BS6 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 விலை பட்டியல்

டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட மாடலாக மட்டும் வந்துள்ள கிளாசிக் 350 பிஎஸ் 6 பைக்குகளில் விலை அறிவிக்கப்பட்டுள்ள நிறங்களை மட்டும் அட்டவணையாக தொகுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து காணலாம்.

நிறங்கள் விலை (BS-VI) விலை (BS-IV) வித்தியாசம்
Classic Black ரூ. 1,65,025 ரூ. 1,53,903 ரூ. 11,122
Gunmetal Grey ரூ. 1,69,791 ரூ. 1,55,740 ரூ. 14,051
Signals Stormrider Sand ரூ. 1,75,281 ரூ. 1,64,095 ரூ.11,186
Signals Airborne Blue ரூ. 1,75,281 ரூ. 1,64,095 ரூ.11,186
Stealth Black ரூ. 1,81,728 NA NA
Chrome Black ரூ. 1,81,728 NA NA

இங்கே கொடுக்கப்பட்டள்ள விலை பட்டியல் எக்ஸ்ஷோரூம் ஆகும்.

குறிப்பாக மற்ற வண்ணங்கள் முன்பே விற்பனையில் இருந்து வரும் நிலையில் ஸ்டெல்த் பிளாக் மற்றும் க்ரோம் பிளாக் ஆகியவை மட்டும் புதிதாக வந்துள்ளது.

போட்டியாளர்கள்

இந்திய சந்தையைப் பொறுத்தவரை போட்டியாளர்களாக ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஜாவா, ஜாவா 42 மற்றும் பெனெல்லி இம்பீரியல் 400 போன்ற மாடல்கள் மிகுந்த சவாலினை ஏற்படுத்துகின்றது. போட்டியாளர்களை விட ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் மிக வலுவான நெட்வொர்க் மற்றும் பாரம்பரியம் போன்றவை மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டின் மற்ற பிஎஸ் 6 மாடல்கள்

புல்லட் 500 உட்பட கிளாசிக் 500, தண்டர்பேர்டு 500 போன்றவை நீக்கப்பட உள்ளது. அடுத்தப்படியாக, இந்நிறுவனத்தின் அட்வென்ச்சர் ரக ஹிமாலயன் பைக்கில் பிஎஸ் 6 என்ஜின் பெறுவதுடன் கூடுதலாக மூன்று புதிய நிறங்களை பெற்றதாக விற்பனைக்கு வெளியாகுவதனை உறுதி செய்யும் வகையில் டீசரை என்ஃபீல்ட் வெளியிட்டுள்ளது.

மற்றபடி, தண்டர்பேர்டு 350, தண்டர்பேர்டு 350 எக்ஸ் , இண்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 போன்றவற்றிலும் பாரத் ஸ்டேஜ் 6 என்ஜினை பெற்றதாக ஏப்ரல் 1, 2020 க்கு முன்பாக கிடைக்க உள்ளது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக்

புதிய 2020 ராயல் என்ஃபீல்டு கிளாசிக் வருகை எப்போது..?

கடந்த சில மாதங்களாகவே சோதனை செய்யப்பட்டு வருகின்ற முற்றிலும் மேம்பட்ட புதிய கிளாசிக் பைக்கில் விற்பனையில் உள்ள 346 சிசி என்ஜினுக்கு மாற்றாக ஹிமாலயன் 410 சிசி என்ஜினை அடிப்படையாக கொண்ட 400 சிசி க்கு இணையான என்ஜின் பெறலாம் என்ற தகவல் பரவி வருகின்றது. இந்த என்ஜின் தற்போது உள்ள புஸ் ராடு நுட்பத்திற்கு விடைகொடுக்க வாய்ப்புள்ளது. இந்த பைக் அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்களுக்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

Exit mobile version