விரைவில்.., பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு ட்வின்ஸ் 650 வெளியாகிறது

interceptor 650

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிஎஸ்6 என்ஜினை இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 என இரு ட்வீன்ஸ் மாடல்களுக்கும் ஆன்லைன் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் விலை விபரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விற்பனையில் உள்ள பிஎஸ்4 மாடலை விட ரூ.8,800 வரை இன்டர்செப்டாரும், ரூ.11,300 வரை கான்டினென்டினல் 650 மாடலும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் இணையதளம் மூலம் ஆன்லைன் முன்பதிவு மற்றும் டீலர்கள் வாயிலாகவும் பதிவு செய்துக் கொள்ளலாம்.

பிஎஸ்6 மாடலின் என்ஜின் விபரம் குறித்து தற்போது இந்நிறுவனம் பதிவேற்றவில்லை. முன்பாக இடம்பெற்றிருந்த 650 சிசி என்ஜின் அதிகபட்சமாக 47 ஹெச்பி குதிரை திறன் ஆற்றலை வெளிப்படுத்த அதிகபட்சமாக 7100 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குவதுடன், குறைந்தபட்ச 4000 ஆர்பிஎம் சுழற்சியில் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருப்பதுடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.

மற்றபடி, எந்த மாற்றங்களும் இடம்பெற வாய்ப்பில்லை. தொடர்ந்து தற்போது கிடைத்து வரும் நிறங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது.

பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 விலை

இன்டர்செப்டார் 650 (ஆரஞ்சு, சில்வர், மார்க் 3) – ரூ.2,64,919

இன்டர்செப்டார் 650 (ரெட், பேக்கர் எக்ஸ்பிரஸ்) – ரூ.2,72,806

இன்டர்செப்டார் 650 (கிளைட்டர்,டஸ்ட்) – ரூ.2,85,951

பிஎஸ்6 ராயல் என்ஃபீல்டு கான்டினென்டினல் ஜிடி 650 விலை

கான்டினென்டினல் ஜிடி 650 (பிளாக் மேஜிக், ப்ளூ) ரூ.2,80,677

கான்டினென்டினல் ஜிடி 650 (மேஹெம், வெள்ளை) ரூ.2,88,564

கான்டினென்டினல் ஜிடி 650 (மிஸ்டர் கிளின்) ரூ.3,01,707

(எக்ஸ்ஷோரூம் டெல்லி)