Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ரூ. 62,034 விலையில் புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் விற்பனைக்கு வெளியானது

by MR.Durai
22 January 2020, 3:04 pm
in Bike News
0
ShareTweetSend

TVS Star City Plus BS6

பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு ஏற்ற புதிய டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கில் டூயல் டோன் மற்றும் சிங்கிள் டோன் என இரு விதமான வேரியண்டை பெற்று ஆரம்ப விலை ரூ.62,034 முதல் தொடங்குகின்றது.

ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கின் முக்கியமான மாற்றமாக விளங்குகின்ற பிஎஸ்6 ஆதரவுக்கு ஏற்ப எஃப்ஐ (ETFi or Eco-Thrust fuel injection) பெற்ற என்ஜின் ஆகும். தற்போது, விற்பனைக்கு வந்துள்ள மாடல் 109 சிசி, ஏர்-கூல்ட் என்ஜின் மூலம் இயக்கப்பட்டு 8.3 பிஹெச்பி பவர் மற்றும் 8.7 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ ஆகும். புதுப்பிக்கப்பட்ட fi (ETFi or Eco-Thrust fuel injection) பெற்ற மாடல் முந்தைய பிஎஸ்4 பைக்கை விட 15 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்இடி ஹெட்லைட், புதுப்பிக்கப்பட்ட ஹெஅட்லைட் வைசர், ரியர் வியூ மிரர் போன்றவற்றுடன் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட் இணைக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் செமி டிஜிட்டல் கிளஸ்டர் போன்ற கூடுதல் அம்சங்களைப் பெறலாம் என எதிர்பார்க்கலாம்.

இந்த மாடலின் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர் கொண்டிருக்கும். இருபக்க டயர்களிலும் டிரம் பிரேக் கொண்ட மாடலில் சிங்கிள் டோன் எனப்படும் ஒற்றை நிறம் மற்றும் டூயல் டோன் என இரு விதமான வேரியண்டில் கிடைக்க உள்ளது.

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் பைக்கின் ஆரம்ப விலை ரூ.62,034 மற்றும் டூயல் டோன் விலை ரூ.62,534 மட்டும் ஆகும். முந்தைய மாடலை விட ரூ.7,500 வரை விலை உயர்ந்துள்ளது.  சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஹெச்எஃப் டீலக்ஸ், ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஸ்மார்ட் போன்ற பிஎஸ்6 மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.

Related Motor News

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் ஆன்-ரோடு விலை, மைலேஜ் மற்றும் சிறப்புகள்

டிவிஎஸ் மோட்டார் விற்பனை நிலவரம் – ஜூன் 2023

110cc பைக்குகளின் ஆன்-ரோடு விலை பட்டியல் – மே 2023

2021 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் விற்பனைக்கு அறிமுகமானது

விரைவில்.., பிஎஸ்6 டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் வெளியாகிறது

டிவிஎஸ் ஸ்டார் சிட்டி பிளஸ் சிறப்பு பதிப்பு விற்பனைக்கு அறிமுகம்

Tags: TVS Star City plus
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

new yamaha xsr155

யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.!

hero xtreme 160r 4v

க்ரூஸ் கண்ட்ரோலுடன் 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 4V அறிமுகமானது

இந்தியாவில் யமஹா ஏரோக்ஸ் எலக்ட்ரிக் அறிமுகமானது

160கிமீ ரேஞ்சுடன் யமஹா EC-06 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியானது

₹ 1.17 லட்சத்தில் யமஹா FZ ரேவ் விற்பனைக்கு வெளியானது

ரூ.1.50 லட்சத்தில் யமஹா XSR155 இந்தியாவில் விற்பனைக்கு வெளியானது

பிஎம்டபிள்யூ F 450 GS அட்வென்ச்சர் அறிமுகமானது

100 கிமீ ரேஞ்சு வழங்கும் புதிய விடா VX2 Go 3.4kwh வேரியண்ட் அறிமுகமானது

ஹீரோ ஹங்க் 440SX இந்தியாவில் விற்பனைக்கு வருமா.?

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிசன் விற்பனைக்கு எப்பொழுது.?

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan