Automobile Tamilan

இனி., இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ், சிபிஎஸ் பிரேக் கட்டாயம்

ஏபிஎஸ் பிரேக் அல்லது சிபிஎஸ் பிரேக் இல்லாமல் எந்தவொரு மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களும் இனி இந்திய இரு சக்கர சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படாது. எனவே ஏபிஎஸ் மற்றும் சிபிஎஸ் பிரேக் வித்தியாசம் பற்றி அறிந்து கொள்ளுவோம்.

ஏபிஎஸ், சிபிஎஸ் பிரேக்

ஏப்ரல் 1, 2018 முதல் இந்திய இரு சக்கர வாகன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகின்ற அனைத்து புதிய மாடல்களிலும் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக் கட்டாயமாக பொருத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

125சிசி க்கு குறைந்த திறன், மின்சாரத்தில் இயங்கும் 11 கிலோ வாட் திறனுக்கு குறைந்த அனைத்து பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களில் சிபிஎஸ் எனப்படுகின்ற கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

125சிசி அல்லது அதற்கு மேற்பட்ட சிசி கொண்ட எஞ்சின், மின்சாரத்தில் இயங்கும் 11 கிலோ வாட் திறனுக்கு அதிகமான இரு சக்கர வாகனங்கள் அனைத்திலும் பூட்டுதலில்லா நிறுத்த அமைப்பு எனப்படுகின்ற ஏபிஎஸ் பிரேக் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இந்த நடைமுறை விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு மற்றும் ஏப்ரல் 1ந் தேதிக்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பொருந்தாது.

ஏபிஎஸ் பிரேக் என்றால் என்ன ?

ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (Anti lock braking system) என்பதன் சுருக்கமே ஏபிஎஸ்(ABS) ஆகும். ஏபிஎஸ் மிக சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்தி வாகனத்தை சரியான இடத்தில் நிற்க உதவுவதுடன் வளைவுகளில் சிறப்பான முறையில் வாகனத்தை கையாள இயலும்.

ஏபிஎஸ் இயக்கம்

ஏபிஎஸ் ஆனது பிரேக் செய்யும் பொழுது வாகனத்தை சக்கரங்கள் பூட்டிக்கொள்ளாமல் அதாவது வாகனத்தின் சக்கரம் சூழலாமல் லாக் ஆகி கொள்வதனை தவிர்க்கின்றது. ஈசியூ மூலம் ஏபிஎஸ் செயல்படுகிறது. அதனால் சரியாக செயல்படும். பிரேக் பிடித்தவுடன் முழுமையாக சக்கரங்களை தாக்காது. ஆனால் சக்கரங்களை விட்டு விட்டு பிடிக்கும் இதனால் வேகம் இயல்பான கட்டுபாட்டுக்குள் வரும்.

மேலும் அறிய – ஏபிஎஸ் பிரேக் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

சிபிஎஸ் பிரேக் என்றால் என்ன ?

சிபிஎஸ் என்றால் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் அதாவது பிரேக் பிடிக்கும் (ஒரு பிரேக் லிவரை பிடித்தால்) முன் மற்றும் பின் பிரேக்குகள் சீராக புரோபர்ஷனல் கன்ட்ரோல் வால்வ் மூலம் இயங்கி சிறப்பான பிரேக்கிங் கிடைக்கும்.
ஜூலை 1, 2019 முதல் கார்களில் ஒட்டுநருக்கான காற்றுப்பை கட்டாயம் என்ற பாதுகாப்பு  விதிமுறை அமல்படுத்தப்பட உள்ளது. இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் சிபிஎஸ் என்ற பெயரிலும் ஹீரோ ஐபிஎஸ், யமஹா யூபிஐ , டிவிஎஸ் சின்க் பிரேக் என மாறுபட்ட பெயர்களில் அறிமுகம் செய்துள்ளன
Exit mobile version