அறிமுகமானது டுகாட்டி ஸ்கிராப்லர் 1100; விலை ரூ.10.91 லட்சம் மட்டுமே

டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது புதிய டுகாட்டி ஸ்கிராப்லர் 1100 மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் 10.91 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) விற்பனை செய்யப்பட உள்ளது. ஸ்கிராப்லர் 1100 ஸ்டாண்டர்ட், ஸ்கிராப்லர் 1100 ஸ்பெஷல், ஸ்கிராப்லர் 1100 ஸ்போர்ட் என மூன்று வகைகளில் இந்த் மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்கிராப்லர் 1100 வகைகளில் ஸ்கிராப்லர் குடும்பத்தில் வெளியான மாடல்களில் பெரிய இன்ஜின் மற்றும் அதிக டெக்னாலஜி வசதிகளை கொண்டதாக இருக்கும்.

ஸ்கிராப்லர் 1100 ஸ்பெஷல் மோட்டார் சைக்கிள்கள் 11.12 லட்ச ரூபாய் விலையிலும் (எக்ஸ் ஷோரூம் விலை) மற்றும் ஸ்கிராப்லர் 1100 ஸ்போர்ட்ஸ் 11.42 லட்ச ரூபாய் விலையிலும் (எக்ஸ் ஷோரூம் விலை) கிடைக்கிறது. ஸ்கிராம்ப்ளர் 1100-கள், 1,079cc இன்ஜின் 85bhp ஆற்றலுடன் 7500rpm மற்றும் உச்சபட்ச டார்க்யூவில் 88Nm உடன் 4,750rpm-ஆக இருக்கும்.

ஸ்கிராப்லர் நாட்டில் அதிகளவில் விற்பனையாகும் மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாக இருப்பதோடு, நாட்டில் பெரியளவிலான மோட்டார் சைக்கிள் பிரிவுகளில் சிறந்த மோட்டார் சைக்கிளாகவும் இருந்து வருகிறது. ஸ்கிராப்லர், வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமிக்க ரைடிங் அனுபத்தை அனுபவத்தை கொடுக்கும்.

இதுமட்டுமின்றி இதில் ABS, தேவைக்கேற்ப டிராக்ஷன் கன்ரோல் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் சுதந்திரமான பயணத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்களில் பெயரில் உள்ள “ஸ்கிராப்லர்” என்ற வார்த்தையே, மகிழ்ச்சியாக நிலத்தில் பயணம் செய்யலாம் என்பதையே குறிக்கும் என்று டுகாட்டி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் செர்கி கேனோவாஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்கிராப்லர் 1100ல் மாற்றியமைக்கப்பட்ட சேஸ்கள் மற்றும் ஏலேக்ட்ரோனிக் ரைட்டு உதவிகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆக்டிவ், ஜெர்னி மற்றும் சிட்டி என்ற முன்று மோடுகள் இதில் உள்ளன. ஆக்டிவ் மோடில் 85bhp வேகத்திலும், ஜெர்னி மோடு-ம் 85bhp அளவுக்கும் எளிதாக வேகமெடுக்கும். சிட்டி மோடில், 75bhp அளவுக்கும் எளிதாக வேகமெடுக்கும். இதில் நான்கு வீல் டிரக்ஷ்ன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் போச் கார்னிங் ABS ஆகியவற்றுடன் பிக் பிஸ்டன் பிரேக்பேட்கள், அட்ஜஸ்ட்டேபிள் கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்களையும் கொண்டுள்ளது.

காஸ்மெட்டிக்கை பொறுத்த வரை ஸ்கிராப்லர் 1100ல் டுகாட்டி ஸ்கிராப்லர் போன்று அதிகளவில் இருக்காது. ஆனால் பீப்பைர் மற்றும் மஸ்குலர், இத்துடன் டுவின் அண்டர்சீட் எக்ஸ்ஹாஸ்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட எளிதாக பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி புதிய டுவின் ஸ்பேர், ஸ்டீல்-ட்ரேலீஸ் பிரேம், இரண்டு புறங்களிலும் அலுமினியம் ஸ்விங்ஆர்ம், புதிய முழுவதும் டிஜிட்டல் மயமான இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், இவை 1970ல் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள்களில் இருந்து பெறபட்டதாக இருக்கும்.

டுகாட்டி ஸ்கிராப்லர் 1100 டெலிவரி அடுத்த மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ஸ்கிராப்லர் 1100 விலையை ஒப்பிடும் போது, இந்த மோட்டார் சைக்கிள்கள் சுசூகி GSX-S1000, மற்றும் ட்ரையம்ப் ஸ்டிரீட் ட்ரிபில் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டுகாட்டி ஸ்கிராப்லர் 1100கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட டிசைனில் வெளியாகியுள்ளது. இவை 62 மஞ்சள் மற்றும் சைனிங் பிளாக் கலர் இத்துடன் சபோர்ட் மற்றும் ஸ்பெஷல் வகை மோட்டார் சைக்கிள்கள் வைப்பர் பிளாக் மற்றும் கஸ்டம் கிரே மற்றும் மஞ்சள் ஹைலைட்டுடனும், டேங்க் கலரும் இது போன்றே இருக்கும். டெல்லி – NCR, மும்பை, புனே, அகமதாபாத், பெங்களூரூ, கொச்சி, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய இடங்களில் இந்த மோட்டார் சைக்கிள்களுக்கான புக்கிங் தற்போது தொடங்கியுள்ளது.

Exit mobile version