EICMA 2018 ஷோவில் 2019 வெளியானது சுசூகி GSX-S125

EICMA மோட்டார் சைக்கிள் ஷோவில் இந்தாண்டு பல்வேறு வகையான மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டது. சுசூகி நிறுவனம் தனது புதிய சுசூகி GSX-S125 மோட்டார் சைக்கிள்களை இந்த ஷோவில் காட்சிக்கு வைத்தது. இந்த மோட்டார் சைக்கிள்கள் குளோபல் மார்க்கெட்டில் அறிமுகமான போதும், இந்தியாவில் புதிய செயல்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களாக நுழைந்துள்ளது. தற்போது 125cc மோட்டார் சைக்கிள்கள் பிரிவில் இந்தியாவில் உள்ள மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக அறிமுகமாகியுள்ளது.

புதிய சுசூகி GSX-S125 மோட்டார் சைக்கிள்கள், 124cc, 4-ஸ்டிரோக், லிகியுட் கூல்டு, DOHC சிங்கிள்-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜெக்டட் இன்ஜின்களுடன் 15bhp ஆற்றலில் 10,000rpm-ல் 11.5Nm பீக்கில் 8000rpm-ல் இயங்கும். இந்த இன்ஜின்கள் ஆறு-ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த பெட்ரோல் இன்ஜெக்டட் திராட்டல் பாடி கொண்டுள்ளது. புதிய சுசூகி GSX-S125 மோட்டார் சைக்கிள்கள் 133kg எடை கொண்டதாக இருக்கும்.

சுசூகி GSX-S125 மோட்டார் சைக்கிள்கள் 290mm பெடல்-டிசைன் சிங்கள் டிஸ்க்களுடன் டூயல் பிஸ்டன் கிளிப்பர்களுடன் முன்புறம் 187mm பெடல் டிசைன் டிஸ்க் சிங்கிள் பிஸ்டன் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த மோட்டார் சைக்கிள்களில் மிகவும் முக்கியமாக ABS பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் 17 இன்ச் 10 ஸ்போக் அலாய் வீல்களுடன் 130/70 புரோப்பைல் கொண்ட டயர்கள் முன்புறமும், 90/80 புரோப்பைல் கொண்ட டயர்கள் பின்புறமும் பொருத்தப்பட்டுள்ளது.

சுசூகி GSX-S125 மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்த பெரிய பட்டியலே உள்ளது. அதாவது முழு LCD இன்ஸ்டுரூமென்ட் கிளச்சர்களுடன் பாரம்பரிய வசதிகளும் உள்ளது. இதுமட்டுமின்றி LED ஹெட்லைட்களுடன் மிகவும் ஸ்டைல் லூக்கில் வெளியாக உள்ளது. இந்த மோட்டார் சைக்கிள்கள் சர்வதேச அளவில் வெளியானால் கவாசாகி Z125 மற்றும் வரவிருக்கும் KTM டியூக் 125 மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக இருக்கும்.

Exit mobile version