100 கிமீ ரேஞ்சு.., இவெர்வ் EF1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்மாதிரி வெளியீடு

everve ef1

புனேவை தலைமையிடமாக கொண்ட இவெர்வ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் EFI எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வடிவமைப்பு முற்றிலும் நவீனத்துவமாகவும் அதேவேளை எதிர்காலத்திற்கான டிசைனை பெற்றதாக ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த மாடல் விற்பனைக்கு 2020 ஆம் ஆண்டின் இறுதி காலண்டில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்ற ஏதெர் 450 எக்ஸ், பஜாஜ் சேட்டக் போன்ற மாடல்களுக்கு கடுமையான சவாலினை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகின்ற EF1 மின்சார பேட்டரி ஸ்கூட்டரை பொறுத்தவரை 3.3 Kw மற்றும் 5 Kw என இரு விதமான மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட உள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 110 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை பெற்ற இந்த ஸ்கூட்டரின் வேகத்தை 90 கிமீ ஆக இவெர்வ் நிறுவனம் கட்டுப்படுத்தியுள்ளது.

மேலும் இ.எஃப் 1 மாடலில் பொருத்தப்பட்டுள்ள இலகுவாக நீக்கி மாற்றிக் கொள்ளும் வகையில் இரட்டை பேட்டரி பேக்கினை 5 ஆம்ப் சாக்கெட்  மூலம் முழுமையாக சார்ஜிங் செய்ய 5 மணி நேரமும், டி.சி ஃபாஸ்ட் சார்ஜிங் வாயிலாக 50 % பேட்டரி சார்ஜ் செய்வதற்கு 1 மணி 50 நிமிடங்கள் தேவைப்படும். முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 100 கிமீ தொலைவு பயணிக்கலாம் என தற்போது எவெர்வ் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக பேட்டரியின் எடை 12 கிலோ இருக்கும்.

மேக்ஸி ஸ்கூட்டர்களுக்கு இணையான நவீனத்துவமான வடிவமைப்பினை பெற்று எல்இடி ஹெட்லைட், எல்இடி ரன்னிங் விளக்கு, எல்இடி டெயில் லைட், அகலமான ஃபுளோர் பெட் போன்றவற்றுடன் விளங்குகின்றது. இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ள TFT கிளஸ்ட்டர் வாயிலாக ஸ்மார்ட்போன் ஆதரவுடன் பல்வேறு வசதிகள் மற்றும் ஏத்தர் ஸ்கூட்டரினை போல OTA மேம்பாடும் வழங்கப்பட உள்ளது.

இரு பக்கத்திலும் 12 அங்குல டயர் உடன் டிஸ்க் பிரேக் மற்றும் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் , பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் இணைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முன்மாதிரி மாடலாக காட்சிக்கு வந்த இவெர்வ் EF1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு ஆண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version