இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் லைவ் வயர் எலக்ட்ரிக் பைக் அறிமுகம்

harley davidson live wire

இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எலக்ட்ரிக் பைக் மாடலான ஹார்லி டேவிட்சன் லைவ் வயர் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களில் வெளியிடப்பட உள்ளது. சிட்டியில் பயணிக்கும் போது 225 கிமீ ரேஞ்ச் தரவல்லதாக லைவ்வயர் விளங்குகின்றது.

ஹார்லியின் முழுமையான முதல் எலக்ட்ரிக் பைக் மாடலாக விளங்குகின்ற லைவ் வயர் மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸை வழங்குவதுடன் சிறப்பான ரேஞ்ச் தரவல்லதாகும். அமெரிக்காவில் விற்பனைக்கு கிடைக்கின்ற லைவ்வயர் விலை $29,799 (தோராயமாக ரூ. 21 லட்சம்) , இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும்போது விலை ரூ. 35 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

15.5 கிலோவாட் பேட்டரி பேக் கொண்ட ஹார்லி-டேவிட்சன் லைவ் வயர் பைக்கில் முழுமையான சிங்கிள் சார்ஜ் மூலம் சிட்டியில் 235 கிமீ பயணிக்கலாம். அதுவே ஹைவே ரேஞ்சு 113 கிமீ ஆக இருக்கும். இரண்டின் சராசரியாக முழுமையான சார்ஜில் அதிகபட்சமாக 152 கிமீ வரை பயணிக்கலாம். இந்த பேட்டரியை டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம், 40 நிமிடங்களில் 80% ஆகவும், 1 மணி நேரத்தில் 100% ஆகவும் ரீசார்ஜ் செய்ய இயலும். அதே நேரத்தில் சாதாரண ஏசி சார்ஜர் முழு ரீசார்ஜ் செய்ய 12-13 மணி நேரம் ஆகும்.

லைவ் வயர் மின்சார பைக்கில் உள்ள மோட்டார் அதிகபட்சமாக 103 hp குதிரைத்திறன், 116 NM முறுக்குவிசையையும் வழங்கும். 3 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டுகிறது.

ஸ்போர்ட், ரோடு, ரெயின், ரேஞ்சு மற்றும் மூன்று கஸ்டம் மோட் என மொத்தமாக 7 விதமான முறைகளை பெற்றுள்ளது.

இந்த பைக்கில் 2.3 இன்ச் TFT டிஸ்ப்ளே, எல்இடி விளக்குகள், ஷோவா பேலன்ஸ் ஃப்ரீ ரியர் குஷன்-லைட் மோனோஷாக் அப்சார்பர்,  43 மிமீ இன்வெர்டேட் ஷோவா அப்சைடு-டவுன் ஃபோர்க், முன்புறத்தில் இரட்டை 300 மிமீ டிஸ்க்குடன் காலிப்பரில் 4 பிஸ்டன் மற்றும் பின்புறத்தில் 260 மிமீ டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

லைவ் வயர் பைக்கில் பாதுகாப்பினை அதிகரிக்க, ரிஃப்ளெக்ஸ் டிஃபென்சிவ் ரைடர் சிஸ்டம்ஸ் (Reflex Defensive Rider Systems -RDRS), கார்னரிங் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம்(சி-ஏபிஎஸ்), கார்னரிங் டிராக்‌ஷன் கன்ட்ரோல் அமைப்பு (C-TCS) மற்றும் டிராக் டார்க் ஸ்லிப் கன்ட்ரோல் ஆகியவற்றைப் பெற்றுள்ளது.