ஹார்லி டேவிட்சன் லைவ் வயர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது

Harley Davidson live wire

2020 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின், எலெக்ட்ரிக் பைக் லைவ் வயர் விற்பனைக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை குறிக்கும் வகையில் இந்திய ஹார்லி-டேவிட்சன் இணையதளத்தில் இந்த மாடலின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஹார்லி-டேவிட்சன் தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது. ஹார்லி-டேவிட்சன் லைவ்வயர் எனப்படும் மோட்டார் சைக்கிள் அமெரிக்க சந்தையில், $ 29,799 என நிர்ணயம் செய்யப்படுள்ளது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும்போது இந்த மாடல் விலை 20.5 லட்சம் என வெளியாகலாம்.

ஹார்லி-டேவிட்சன் லைவ் வயர்

EICMA 2018 மோட்டார் சைக்கிள் ஷோ மற்றும் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் ஷோ (CES) 2019 ஆகிய கண்காட்சியில் ஹார்லி-டேவிட்சன் லைவ் வயரை ஒரு கான்செப்ட் வாகனமாக அறிமுகப்படுத்திய பின்னர், இந்நிறுவனம் இந்த மின்சார பைக்கை தனது இந்திய இணையதளத்தில், ‘எதிர்கால வாகனங்கள்’ பிரிவின் கீழ் பட்டியலிட்டுள்ளது.  ஆனால் அறிமுகம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்றாலும், 2020 ஆம் ஆண்டில் இந்த மின்சார பைக் வெளியாகலாம்.

15.5 கிலோவாட் பேட்டரி பேக் கொண்ட ஹார்லி-டேவிட்சன் லைவ் வயர் பைக்கில் முழுமையான சிங்கிள் சார்ஜ் மூலம் 235 கிமீ பயணிக்கலாம். இந்த பேட்டரியை டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம், 40 நிமிடங்களில் 80% ஆகவும், 1 மணி நேரத்தில் 100% ஆகவும் ரீசார்ஜ் செய்ய இயலும். அதே நேரத்தில் சாதாரன ஏசி இயங்கும் சார்ஜர் முழு ரீசார்ஜ் செய்ய 12-13 மணி நேரம் ஆகும்.

Harley-Davidson-LiveWire

ஹார்லி டேவிட்சன் நிறுவன பைக்குகளில் அதிகப்படியான பவரை வெளிப்படுத்தும் மாடலாக லைவ் வயர் விளங்குகின்றது.  இந்த பைக்கினை இயக்கும் மின்சார மோட்டார் அதிகபட்சமாக 103 hp குதிரைத்திறன், 116 NM முறுக்குவிசையையும் வழங்கும். 3 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டுகிறது.

ஸ்போர்ட், ரோடு, ரெயின், ரேஞ்சு மற்றும் மூன்று கஸ்டம் மோட் என மொத்தமாக 7 விதமான முறைகளை பெற்றுள்ளது.

இந்த பைக்கில் 2.3 இன்ச் TFT டிஸ்ப்ளே, எல்இடி விளக்குகள், ஷோவா பேலன்ஸ் ஃப்ரீ ரியர் குஷன்-லைட் மோனோஷாக் அப்சார்பர்,  43 மிமீ இன்வெர்டேட் ஷோவா அப்சைடு-டவுன் ஃபோர்க், முன்புறத்தில் இரட்டை 300 மிமீ டிஸ்க்குடன் காலிப்பரில் 4 பிஸ்டன் மற்றும் பின்புறத்தில் 260 மிமீ டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

லைவ் வயர் பைக்கில் பாதுகாப்பினை அதிகரிக்க, ரிஃப்ளெக்ஸ் டிஃபென்சிவ் ரைடர் சிஸ்டம்ஸ் (Reflex Defensive Rider Systems -RDRS), கார்னரிங் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (சி-ஏபிஎஸ்), கார்னரிங் டிராக்‌ஷன் கன்ட்ரோல் அமைப்பு (C-TCS) மற்றும் டிராக் டார்க் ஸ்லிப் கன்ட்ரோல் ஆகியவற்றைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் லைவ் வயர் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள தேதி குறித்து எந்த அறிவிப்பும் வழங்கப்படவில்லை.

2019 Harley Davidson LiveWire Charging Port Harley-Davidson-LiveWire Harley-Davidson-LiveWire