ஹார்லி-டேவிட்சன் ஸ்டீரிட் ராட் 750 விற்பனைக்கு வந்தது

0

ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் 750 பைக்கினை அடிப்படையாக கொண்ட ஸ்டீரிட் ராட் 750 ரூ. 5.86 லட்சம் விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டீரிட் 750 பைக் மாடலுக்கு மேலாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

ஹார்லி-டேவிட்சன் ஸ்டீரிட் ராட் 750

  • ரூ.5.86 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் ராட் 750 கிடைக்கும்.
  • சாதாரன ஸ்டீரிட் 750 மாடலை விட 11 சதவீத கூடுதல் ஆற்றல் மற்றும் 5 சதவீத டார்க்கினை வெளிப்படுத்தும்.
  • பாரத் ஸ்டேஜ் 4 தர 750சிசி என்ஜினை பெற்றுள்ளது.

ஸ்டீரிட் 750 பைக்கில் இருந்து வித்தியாசப்படும் வகையில் தோற்ற அமைப்பில் சிறிய அளவிலான மாற்றங்களை பெற்றுள்ள ராட் 750 பைக்கில் இடம்பெற்றுள்ள  749சிசி சிங்கிள் OHC 8V 60°  வி ட்வீன சிலண்டர் என்ஜினை பெற்று ஸ்டீரிட் 750 மாடலை விட 11 சதவீத கூடுதல் ஆற்றல் மற்றும் 5 சதவீத டார்க்கினை வெளிப்படுத்துவதனால் இந்த பைக்கின் டார்க் அதிகபட்சமாக 65Nm ஆகும்.

முன்புறத்தில் 120/70/17 மற்றும் பின்புறத்தில் 160/60/17 அளவினை கொண்ட எம்ஆர்எஃப் ரேடியல் டயர்கள் பொருத்தப்பட்டுள்ள இந்த பைக்கின் முன்பக்கத்தில் 43 மிமீ  யூஎஸ்டி ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் அம்சத்தை பெற்றுள்ளது.

விவிட் பிளாக், சார்கோல் டேனிம் மற்றும் ஆலிவ் கோல்டு என மூன்று விதமான வண்ணங்களில் கிடைக்க உள்ள இந்த பைக்கில் 3.5 அங்குல எலக்ட்ரானிக் ஸ்பீடோமீட்டர் ஆப்ஷனை பெற்று விளங்குகின்றது.

ஹார்லி-டேவிட்சன் ஸ்டீரிட் ராட் 750 பைக் விலை ரூ. 5.86 லட்சம் (டெல்லி எக்ஸ்-ஷோரூம்)