அட்வென்ச்சர் டூரர் உள்பட மூன்று புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்கிறது ஹார்லி-டேவிட்சன்

வரும் 2020ல் அட்வென்ச்சர் டூரர் மாடல் உள்பட தனது மோட்டர் சைக்கிள்களை முழுவதுமான புதிய வகையில் மாற்றி அமைக்கப்பட்ட உள்ளதாக ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, மிடில்வெயிட் ஸ்ட்ரீட்பைட்டர் மற்றும் புதிய கஷ்டமஸ்டு மாடல் என இரண்டு புதிய மாடல்களையும் அறிமுகம் செய்ய உள்ளது.

புதிய மாடுல்ர் 500cc முதல் 1250cc மிடில்வெயிட் பிளாட்பார்மி மோட்டர்சைக்கிள்களை உருவாக்கப்பட உள்ளதோடு, மூன்று வகைகளில் தயாரிக்கப்பட உள்ளது இதில் முதல் மாடலாக ஹார்லி டேவிட்சன்னின் முதல் அட்வென்ச்சர் டூரிங் மோட்டர் சைக்கிள் ஆகும்.


இந்த மூன்று மாடல்களும் வரும் 2020ல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்குகளின் புகைப்படங்களை ஏற்கனவே ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனாலும் தயாரிப்பு நிலையில் இந்த மாடல்களில் சில மாற்றங்கள் இருக்கும். இது குறிப்பாக வசதிகள் மற்றும் டிசைனில் இருக்கலாம்.

இதுகுறித்து ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் தெரிவிக்கையில், மோர் :ரோடுஸ் டு ஹார்லி டேவிட்சன்” வளர்ச்சி திட்டங்களை வகுக்கும் போது வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து கொண்டும், ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் 2027 நோக்கங்களை மனதில் கொண்டே உருவாக்கப்படுகிறது. :ரோடுஸ் டு ஹார்லி டேவிட்சன்” திட்டம் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வது, வாடிக்கையாளர்களுக்கான சேவையை விரிவு படுத்துவது மற்றும் டீலர்ஷிப் நெட்வொர்க்கை மேம்படுத்துவது போன்றவதை உள்ளடக்கியதாக இருக்கும்.

முக்கியமாக ஹார்லி டேவிட்சன் வெளியிட்ட அறிவிப்பில், எளிதாவும், சிறிய மாற்றங்களுடனும் கொண்ட மோட்டர்சைக்கிள்களை ஆசிய மற்றும் பெரியளவிலான மார்க்கெட்டுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி முதல் எலெக்ட்ரிக்மோட்டார் சைக்கிளான ஹார்லி-டேவிட்சன் LiveWire வகைகள் வரும் 2019ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து மேலும் பல எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் மாடல்கள் 2022ல் அறிமுகம் செய்யப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You