ஹீரோ குவார்க் 1 டூ வீலரும், மூன்று சக்கர வாகனமும் ஒன்றே..! ஹீரோ மோட்டோகார்ப்

0

hero quark 1

ஹீரோ மோட்டோகார்ப் இன்றைக்கு புதிய மோட்டார்சைக்கிளுடன் குவார்க் 1 என்ற எதிர்காலத்திற்கான கான்செப்ட் நிலை மாடலை இரு சக்கர வாகனமாகவோ அல்லது மூன்று சக்கர வாகனமாகவோ மாற்றிக் கொள்ளும் வகையில் உருவாக்கி வருகின்றது. இது ஹீரோ ஹேட்ச் என்ற எலெக்ட்ரிக் வாகன திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வருகின்றது.

Google News

M360 மற்றும் AMSEP (Advanced Modular Scalable Electric Powertrain) தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்படுகின்ற குவாரக் 1 மாடலை பொறுத்தவரை,இரண்டு சக்கரங்களை கொண்டு டூ வீலராகவும், அதே நேரத்தில் மூன்று சக்கரங்களை பயன்படுத்தி ஆட்டோ போல பயன்படுத்திக் கொள்ள இலகுவான முறையில் டயர்களை மாற்றிக் கொள்ளும் வகையில் வடிவமைத்து வருகின்றது.

வாகனத்தின் எடையை வெகுவாக குறைக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டு வருகின்ற இந்த மாடல், குதிரையை பயன்படுத்தி காலத்தினை போன்றே பல்வேறு பயன்களை நோக்கமாக கொண்டு இந்த மாடலை நவீனத்துவமான வடிவமைத்து வருவதாக தெரிகின்றது.

hero quark 1

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ், இரு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வண்டி என இரண்டுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இ-காமர்ஸ் மற்றும் டெலிவரிகள் உள்ளிட்ட தேவைகளுக்கும் தனிப்பட்ட மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கான, முறையான மூன்று சக்கர வண்டியின் எல் 5 மற்றும் இரு சக்கர வாகனத்தின் எல் 2 ஆகிய இரண்டிற்கும் இலகுவாக மாற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.10,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த மாடல் ஆரம்ப நிலையில் உள்ளது.

hero quark 1

image credit – Chanchal Pal Chauhan/twitter – etauto