Automobile Tamil

இந்தியாவில் ஹீரோ அச்சீவர் 150 பைக் நீக்கப்படுகின்றது

ஹீரோ அச்சீவர் 150

150சிசி சந்தையில் விற்பனை செயப்படுகின்ற குறைந்த விலை ஹீரோ அச்சீவர் பைக்கினை நீக்க ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பைக் நீண்ட காலமாக சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ஆனால் ஏப்ரல் 1 முதல் ஏபிஎஸ் மற்றும் சிபிஎஸ் பிரேக் இணைப்பு கட்டாயம் என்பதனால் , இதுவரை இந்த பைக்கில் ஏபிஎஸ் பிரேக்கினை ஹீரோ பைக் நிறுவனம் இணைக்கவில்லை.

ஹீரோ அச்சீவர் 150 விற்பனை நிறுத்தம்

கடந்த 2016 ஆம் ஆண்டு ஐ3எஸ் அம்சத்துடன் மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளியான அச்சீவர் 150 பைக்கில் 13.4 bhp பவரை வெளிப்படுத்தும் 150சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 12.8Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹோண்டா சிபி யூனிகார்ன், பஜாஜ் வி15 , பல்சர் 150 , டிவிஎஸ் அப்பாச்சி போன்ற பைக்குளுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்பட இந்த பைக் மாடலுக்கு போதிய வரவேற்பின்மை காரணமாக சந்தையில் பின்தங்கியே உள்ளது.

மேலும், வரும் ஏப்ரல் 1 முதல் 125சிசி க்கு குறைந்த திறன் பெற்ற பைக்குகளில் சிபிஎஸ் பிரேக் மற்றும் 125சிசி க்கு மேற்பட்ட பைக்குகளில் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட வேண்டும். ஆனால் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட வேண்டுமென்றால் பைக்கின் விலை குறைந்தபட்சம் ரூபாய் 7000 வரை அதிகரிக்கும். ஆனால் போதிய வரவேற்பின்மையின் காரணமாக அச்சீவர் பைக்கை கைவிடக்கூடும் என கதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version