ஹீரோவின் 400சிசி அட்வென்ச்சர் பைக் அறிமுக விபரம்

upcoming hero adv

உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரின் அடுத்த மாடல் 300-400சிசி க்கு இடையிலான என்ஜினை பெற்று விற்பனைக்கு வரவுள்ள அட்வென்ச்சர் பைக் மாடலாக இருக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. அட்வென்ச்சர் பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் மிகுந்த கவனம் செலுத்த துவங்கியுள்ளது.

தற்போது இந்நிறுவனம் 200 சிசி என்ஜின் பெற்ற எக்ஸ்பல்ஸ் அட்வென்ச்சரை விற்பனை செய்து வரும் நிலையில், நேற்றைக்கு புதிய ஸ்டீரீட் பைக் மாடலாக எக்ஸ்ட்ரீம் 160ஆர் மாடலை வெளியிட்டுள்ளது.  இதுதவிர பிஎஸ்6 என்ஜின் பெற்ற பேஸன் புரோ மற்றும் கிளாமர் பைக்குகள் வெளியானது.

கடந்த சில ஆண்டுகளாக ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் டாக்கர் ரேலியில் பங்கேற்று வரும் நிலையில், சவால் மிகுந்த இந்த பந்தய களத்தில் பயன்படுத்தி வருகின்ற 450சிசி என்ஜின் பெற்ற ரேலி பைக் மாடலின் அடிப்படையில் பொது மக்களின் தேவையினை பூர்த்தி செய்யும் வகையிலான ஆன் ரோடு மற்றும் ஆஃப் ரோடு பயணங்களக்கு ஏற்ற அட்வென்ச்சரை 350சிசி முதல் 400 சிசி க்குள் வடிவமைக்கப்பட்ட லிக்யூடு கூல்டு என்ஜினை கொண்டு உருவாக்க உள்ளது. அனேகமாக இந்த மாடல் 30 ஹெச்பி பவருக்கு கூடுதலான பவரை வெளிப்படுத்தும் 6 வேக கியர்பாக்ஸ் உடன் வரக்கூடும்.

இந்த மாடலின் எவ்விதான நுட்பவிபரங்களும் தற்போதைக்கு அறிவிக்கப்படவில்லை என்றாலும் காட்சிப்படுத்தப்பட்ட அட்வென்ச்சர் ஸ்டைல் மாடலை பொறுத்த வரை, இந்நிறுவனம் முதன் முறையாக ஸ்டீல் டெர்லீஸ் ஃபிரேம் பயன்படுத்தப்பட்டு, முன்புறத்தில் யூஎஸ்டி ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஒற்றை மோனோ ஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது. வயர்டு ஸ்போக் வீல் கொண்டுள்ள இந்த மாடலின் முன்புறத்தில் 21 அங்குலமும், 19 அங்குல பின்புற வீலும் வழங்கப்பட்டுள்ளது.

இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் இணைக்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் சுவிட்சபிள் ஆப்ஷனை இணைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெறும் வாய்ப்புகள் உள்ளது.

2020 ஆம் ஆண்டின் இறுதியில் உற்பத்தி நிலை மாடல் தயாராகவுள்ளதால், விற்பனைக்கு அனேகமாக 2021 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியிடப்படலாம். ஹீரோ மோட்டோகார்ப் அடுத்த தலைமுறை வாகனங்களுக்கு என ரூ.10,000 கோடி முதலீட்டை அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் மேற்கொள்ள உள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன், கேடிஎம் 390 அட்வென்ச்சர், பிஎம்டபிள்யூ 310 ஜிஎஸ், கவாஸாகி வெர்சிஸ் X 300 போன்றவற்றை விட கடுமையாக எதிர்கொள்ளும் திறனுடன் ஹீரோ அட்வென்ச்சர் களமிறங்க உள்ளது.

image-autocarindia

Exit mobile version