ஹீரோ பேஸன் புரோ பிஎஸ்6 பைக்கின் சிறப்புகள்

0

hero passion pro bs6

இந்தியாவின் 110சிசி சந்தையில் பிரபலமாக விளங்குகின்ற புதிய ஹீரோ பேஸன் புரோ பைக்கில் பாரத் ஸ்டேஜ் 6 என்ஜினை பெற்றிருப்பதுடன் சேஸ், ஸ்டைலிங் மாற்றங்கள் உட்பட புதிய நிறங்கள் கொண்டதாக விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது.

Google News

ஸ்டைலிங் அம்சங்கள்

புதிய டைமண்ட் சேஸை பெற்றிருக்கின்ற பேஸன் புரோ மாடலில் பல்வேறு ஸ்டைலிங் மாற்றங்களுடன் கூடுதல் நீளத்தை கொண்டுள்ளதால் பைக்கின் ஸ்டெபிளிட்டி அதிகரித்துள்ளது. அதே போல இந்த மாடலின் முன்புற சஸ்பென்ஷன் டிராவல் 14 சதவீதமும், பின்புற சஸ்பென்ஷன் டிராவல் 10 சதவீதமும் உயர்ந்துள்ளது. அடுத்தப்படியாக இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரண்ஸ் 9 சதவீதம் உயர்ந்துள்ளது.

புதுப்பிக்கப்பட்ட ஹெட்லைட், டெயில் லைட், மூன்று விதமான கிராபிக்ஸ் என பல்வேறு மாற்றங்களுடன் புதிய நிறங்களை கொண்டுள்ளது.

hero passion pro bs6 tank

பிஎஸ்6 என்ஜின்

பேஸன் புரோவின் முந்தைய கார்பரேட்டட் என்ஜினுக்கு பதிலாக ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் இயக்கப்படுகின்ற (XSens Programmed fuel injection) 7,500 ஆர்.பி.எம்-ல் 8.9 பிஹெச்பி மற்றும் 5,500 ஆர்.பி.எம்-ல் 9.79 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் 4 வேக கியர்பாக்ஸ் உள்ளது. புதிய பேஸன் புரோ மாடல் 5 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதுடன், கூடுதல் 9 சதவீத பவர் மற்றும் 22 சதவீத டார்க் கூடுதலாக வெளிப்படுத்துகின்றது.

hero passion pro bs6 red color

புதிய வசதிகள்

ஹீரோவின் ஐ3எஸ் நுட்பம், நெரிசல் மிகுந்த சாலைகளில் கியரை ஷிஃப்ட் செய்யாமல் பைக்கினை இயக்குவதற்கு ஆட்டோ செயில் நுட்பத்துடன் வந்துள்ளது. அடுத்தப்படியாக புதிய செமி டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டதாக வந்துள்ள இந்த கிளஸ்ட்டரில் மூலம் நிகழ் நேரத்தில் மைலேஜ் அறிந்து கொள்ளலாம்.

hero passion pro bs6 headlight

வேரியண்ட் & நிறங்கள்

ஹீரோ பேஸன் புரோ மாடல் டிரம் மற்றும் டிஸ்க் உள்ளிட்ட இரண்டு வகைகளில் இந்த மோட்டார் சைக்கிள் வருகிறது. இப்போது இந்த பைக்கில் மஞ்சள், நீலம், சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களை பெற்றுள்ளது.

hero passion pro bs6 cluster

ஹீரோ பேஸன் புரோ விலை

Hero passion pro ரூ .64,990 (drum)

bs6 hero passion pro ரூ. 67,190 (disc)

(எக்ஸ்-ஷோரூம், டெல்லி).

hero passion pro bs6 rear