புதிய ஹீரோ கரீஷ்மா பைக் வருகை விபரம்

0

இந்தியாவின் முதன்மையான மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், புதிய ஹீரோ கரீஷ்மா பைக் மாடலை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2003 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ ஹோண்டா கரீஷ்மா அபரிதமான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அதனை தொடர்ந்து வெளியான மேம்படுத்தப்பட்ட மாடல் பெரிய அளவில் சோபிக்காத நிலையில் தொடர்ந்து இந்த பைக் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

Google News

சமீபத்தில் விற்பனைக்கு வெளியான ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R பைக் , வரவுள்ள எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200T ஆகிய பைக் மாடலின் பிளாட்ஃபாரமில் வடிவமைக்கப்பட உள்ள 200சிசி என்ஜின் பெற்ற முழுமையான ஃபேரிங் செய்யப்பட்ட மாடலாக வரவுள்ள புதிய பைக்கிற்கு கரீஷ்மா என பெயர் சூட்டுவதற்கு ஹீரோ திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.

புதிய கரீஷ்மா 200 பைக் மாடலில் தற்போது இடம்பெற்றுள்ள 18.4PS மற்றும் 17.1 Nm டார்க் வழங்கும் 200 சிசி என்ஜின் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்றதாக விளங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்றபடி பெரும்பாலான பாகங்கள் 200 ஆர் பைக்கிலிருந்து பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 மற்றும் யமஹா ஆர்15 போன்ற மாடல்களை நேரடியாக சந்திக்கும் வகையிலும் இவற்றை விட மிக விலை குறைவு மற்றும் மைலேஜ் வழங்கும் மாடலாக புதிய ஹீரோ கரீஷ்மா விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.