ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விலை உயர்த்திய ஹீரோ

0

hero splendor ismart 1

இந்தியாவின் மிகவும் பிரபலமான கம்யூட்டர் பைக் மாடலான ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் பைக்கின் விலை ரூ.2200 வரை ஹீரோ மோட்டோகார்ப் உயர்த்தியுள்ளது. புதிய ஐஸ்மார்ட்டில் பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்டதாக விற்பனை செய்யப்படுகின்றது.

Google News

113.2 சிசி என்ஜின் i3s உடன் இடம்பெற்றுள்ளது. முந்தைய என்ஜினுக்கு முற்றிலும் மாற்றறாக புதிய Programmed FI என்ஜின் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 9.0 ஹெச்பி (6.73Kw) பவரை தொடர்ந்து 7500 ஆர்பிஎம் சுழற்சியில் வழங்குகின்றது.

மேலும், புதிய ஐஸ்மார்ட் பைக்கின் நீளம், மற்றும் உயரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாடலில் இரு டயர்களிலும் டிரம் பிரேக் மற்றும் டிஸ்க் பிரேக்குடன் கூடிய டிரம் என இரண்டு விதமான வேரியண்டுகள் கிடைக்க உள்ளது. முதற்கட்டமாக 240 மிமீ டிஸ்க் மற்றும் 130 மிமீ டிரம் பிரேக் மாடல் கிடைக்க தொடங்கியுள்ளது. பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான FI என்ஜின், சிறிய அளவிலான ஸ்டைலிங் டூயல் டோன் மாற்றங்கள் மற்றும் புதிய பாடி கிராபிக்ஸ் உட்பட சில மாற்றங்களை கொண்டிருக்கின்றது.

ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட் டிஸ்க் மாடல் ரூ.67,100  எக்ஸ்ஷோரூம் விலை ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது