Automobile Tamil

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200டி பைக்கின் முக்கிய விபரங்கள்

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள அட்வென்ச்சர் ரக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ( Hero XPulse 200) மற்றும் டூரிங் ரக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 ( Hero XPulse 200T) பைக்கில் இடம்பெற்றுள்ள முக்கிய விபரங்களை இங்கே அறிந்து கொள்ளலாம். குறைந்த விலையில் வெளியாக உள்ள இந்த மாடலுக்கு நேரடியான போட்டியாளர்கள் இல்லை. சமீபத்தில் வெளியடப்பட்ட எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட அட்வென்ச்சர் ரக எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் டூரர் ரக எக்ஸ்பல்ஸ் 200T பைக்கின் விலை கீழே வழங்கப்பட்டுள்ளது.

 

ஹீரோவின் பிரிமியம் ஸ்டைல் எக்ஸ்பல்ஸ் 200

மேல் எழும்பிய மட்கார்டு, மேல் நோக்கிய சைலன்சர் கொண்டிருப்பதுடன், ஸ்போக் வீல்ஸ், என்ஜின் கார்டு மற்றும் நக்ல் கார்டு உட்பட இரு பயன் சார்ந்த டயர் என பல்வேறு அம்சங்களை கொண்டதாக வரவுள்ள இந்த பைக் ஆஃப் ரோடு மற்றும் ஆன் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மாடலாக விளங்க உள்ளது. பக்கவாட்டில் லக்கேஜ் வைப்பதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் கொண்ட இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில் லைட் , கியர் பொசிஷன் இன்டிகேட்டர் போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

200சிசி என்ஜின்

எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கில் பொருத்தப்பட்டிருந்த கார்புரேட்டர் என்ஜின் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் என இரு ஆப்ஷனை கொண்டிருக்கின்றது. அதிகபட்சமாக 18.4 ps பவர் மற்றும்  17.1 Nm  டார்க் திறனை கொண்டதாக விளங்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

190 மிமீ பயணிக்கும் சஸ்பென்ஷன் , பின்புறத்தில் வழங்கப்படுள்ள ஒற்றை ஷாக் அப்சார்பர் அதிகபட்சமாக 170 மிமீ பயணிக்கும், இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மிமீ கொண்டிருப்பதுடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், எல்இடி ஹைட்லைட் கொண்டதாக இருக்கும் என அறியப்பட்டுள்ளது.

எக்ஸ்பல்ஸ் 200 விலை மற்றும் எதிர்பார்ப்புகள்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 – ரூ.97,000

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 FI – ரூ.1,05,000

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T – ரூ.94,000

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் – ரூ.98,500

நேரடியான போட்டியாளர்களை இல்லாத நிலையில், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மற்றும் பிஎம்டபிள்யூ ஜிஎஸ் 310ஆர் பைக்குகளுக்கு சவாலாக விளங்குகின்றது.

Hero Xpulse 200 & Xpulse 200T image gallery

 

Exit mobile version