hero xtreme 160r : கலக்கலான ஹீரோ எக்ஸ்டீரீம் 160 ஆர் பைக் அறிமுகம்

hero-xtreme-160-r

வரும் மார்ச் மாதம் விற்பனைக்கு வெளியாக உள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக் இந்தியாவின் மிக வேகமான 160சிசி பைக் மாடலாக வந்துள்ளது. 0-60 கிமீ வேகத்தை 4.7 விநாடிகளில் எட்டி விடும் திறனை கொண்டுள்ளது.

150சிசி சந்தையில் விற்பனை செய்யப்பட்ட எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் நீக்கப்பட்டதை தொடர்ந்து முன்பாக காட்சிக்கு வந்த இஐசிஎம்ஏ அரங்கில் வெளியிடப்பட்ட எக்ஸ்ட்ரீம் 1.ஆர் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய எக்ஸ்ட்ரீம் 160 ஆர் மிக ஸ்டலிஷாக இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில் வந்துள்ளது.

160சிசி என்ஜின் அதிகபட்சமாக 8,500rpm-ல் 15 பிஹெச்பி பவர் மற்றும் 6,500rpm-ல் 14 என்எம் டார்க் வெளிபடுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 0 முதல் 60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.7 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும்.

எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கினை பொறுத்தவரை மிகவும் ஸ்டைலிஷாக அதேவேளை பெரிய அளவிலான டேங்க், அகலமான டயர் கொண்டிருப்பதுடன் ஸ்டைலிஷான பாடி பேனல்களை கொண்டுள்ளது. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் நிறங்களை பெற்றுள்ளது. எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் உடன் முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டர் அம்சத்தை பெற்றிருப்பதுடன் இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் முன்பக்க டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் வழங்கப்பட்டு இரு விதமான வேரியண்டில் கிடைக்க உள்ளது.

ஷோவாவிலிருந்து பெறப்பட்ட 37 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஒற்றை மோனோஷாக் அப்சார்பரும் உள்ளது. விற்பனைக்கு மார்ச் மாதம் வெளியிடப்பட உள்ளதால் அடுத்த சில வாரங்களில் முன்பதிவு துவங்கப்பட உள்ளது.

இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்போது, இந்த மோட்டார் சைக்கிள் சுசுகி ஜிக்ஸர், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் யமஹா எஃப்இசட் வி 3 ஆகியவற்றுக்கு சவாலினை ஏற்படுத்தும்.

Exit mobile version