ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலை எவ்வளவு ?

29bcb hero xtreme 160r special edition

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன் விலையை ரூ.1.08 லட்சம் ஆக நிர்ணையித்துள்ளது.

விற்பனையில் கிடைக்கின்ற சிங்கிள் டிஸ்க் மாடலை விட ரூ.4,500 மற்றும் டூயல் டிஸ்க் பிரேக்கை விட ரூ.1,800 வரை கூடுதலாக விலை உயர்த்தப்பட்டு சிறப்பு எடிஷன் வெளியிடப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R சிறப்பு எடிஷன்

சிவப்பு மற்றும் வெள்ளை நிற கலவையை பெற்றுள்ள 100 மில்லியன் சிறப்பு எடிசனில் டெக்கனிக்கல் சார்ந்த மாற்றங்கள் இல்லை. புதிய நிறம் மற்றும் பேட்ஜ் மட்டுமே பெற்றுள்ளது.

எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக்கின் என்ஜின் மிக நேர்த்தியாக ட்யூன் செய்யப்பட்டு மிக சிறப்பான முறையில் அதிகபட்சமாக 8,500rpm-ல் 15.2 ஹெச்பி பவர் மற்றும் 6,500rpm-ல் 14 என்எம் டார்க் வெளிபடுத்தும். உள்ளது. குறிப்பாக அப்பாச்சி 160 பைக்கின் என்ஜின் ஆயில் கூல்டு பெற்றுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸை பெற்றுள்ளது.

சிங்கிள் டிஸ்க் – ரூ. 1.04 லட்சம்

டூயல் டிஸ்க் – ரூ. 1.07 லட்சம்

ஸ்பெஷல் எடிஷன் – ரூ. 1.09 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் இந்தியா)

100 மில்லியன் எடிஷன்

1984 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஹீரோ நிறுவனம், 2013 ஆம் ஆண்டு 5 கோடி உற்பத்தி எண்ணிக்கையை கடந்த நிலையில் அடுத்த 7 ஆண்டுகளில் மற்றொரு 5 கோடி இலக்கை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ளது. ஹீரோவின் ஹரித்வார் உற்பத்தி நிலையத்திலிருந்து வெளியேறி 100 மில்லியன்  பைக் மாடலாக எக்ஸ்ட்ரீம் 160 ஆர் விளங்குகின்றது. இந்நிறுவனம் ஸ்ப்ளெண்டர் +, எக்ஸ்ட்ரீம் 160 ஆர், பேஷன் புரோ, கிளாமர் மற்றும் டெஸ்டினி 125, மேஸ்ட்ரோ எட்ஜ் 110 உள்ளிட்ட ஆறு மாடல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

Share
Published by
MR.Durai