ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.R கான்செப்ட் வெளியானது – 2019 இஐசிஎம்ஏ

Xtreme 1.R Concept vehicle

உலகின் முதன்மையான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், 2019 இஐசிஎம்ஏ மோட்டார் சைக்கிள் கண்காட்சி அரங்கில் புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.R (Xtreme 1.R) கான்செப்ட் மாடலை முதன்முறையாக காட்சிக்கு வெளியிடப்பட்டுள்ளது. 160சிசி என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள கான்செப்ட் நிலை ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் மாடல் முன்பாக விற்பனையில் உள்ள ஹீரோவின் எக்ஸ் வரிசையில் இடம்பெற்றுள்ள மாடல்களின் அடுத்த தலைமுறை டிசைன் மாடலாகும். ஒருவேளை இந்த மாடல் உற்பத்தி நிலை எட்டும்பொழுது மிகவும் ஸ்டைலிஷாகவும், ஒற்றை இருக்கைக்கு மாற்றாக இரண்டு இருக்கைகளை கொண்டிருக்கும். ஆனால் இந்த மாடலின் எந்தவொரு நுட்பத்தையும் ஹீரோ வெளியிடவில்லை.

மிக ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டுள்ள எல்இடி ஹெட்லைட் உடன் எல்இடி ரன்னிங் விளக்கினை பெற்று கூர்மையான எட்ஜ் வெளிப்படுத்தும் அமைப்பினை 1.ஆர் பைக் கான்செப்ட் பெற்று, பின்புறத்தில் எல்இடி விளக்கு பெற்று கொண்ட மாடலின் எடை 140 கிலோ கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hero Xtreme 1.R Concept side Hero Xtreme 1.R Concept bike Xtreme 1.R Concept vehicle

Hero Xtreme 1R Concept

Xtreme 1.R Concept

எக்ஸ்ட்ரீம் 1.R கான்செப்ட்டில் முன்புறத்தில் இன்வெர்டேட் ஃபோர்க்குகள் மற்றும் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பெற்றுள்ளது. இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு , டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் இணைக்கப்பட்டுள்ளது. உற்பத்திக்கு செல்ல உள்ள எக்ஸ்ட்ரிம் 1.ஆர் கான்செப்ட் அடுத்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படலாம்.

Hero Xtreme 1R Concept viewHero Xtreme 1.R Concept rear view Hero Xtreme 1.R Concept fr Hero Xtreme 1.R Concept st Hero Xtreme 1.R Concept lever