ஆக்டிவா 6ஜி & எஸ்பி 125 விலையை உயர்த்திய ஹோண்டா

0

ஆக்டிவா 6ஜி

பிஎஸ்-6 என்ஜினை பெற்று விற்பனைக்கு கிடைத்து வருகின்ற ஹோண்டாவின் ஆக்டிவா 6ஜி மற்றும் எஸ்பி 125 என இரு மாடல்களின் விலையை ரூ.552 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Google News

ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் Fi பெற்ற ஃபயூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 109.51 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.79 hp பவர் மற்றும்  5,250 ஆர்பிஎம்-ல் 8.79 NM டார்க் வழங்குகின்றது.

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டர் டிரம் பிரேக் வேரியண்டின் ஆரம்ப விலை ரூ.67,688

முன்புற டிஸ்க் பிரேக் வேரியண்ட் விலை ரூ.69,188

honda shine sp 125

அடுத்ததாக, இந்நிறுவனத்தின் பிரீமியம் 125 சிசி பைக் மாடலான எஸ்பி 125 விலை ரூ.552 வரை உயர்ந்துள்ளது. இந்த மாடலில் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 124 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 124.73 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு ஹோண்டா SP125 ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்றதாக வரவுள்ள இந்த மாடலின் பவர் தற்பொழுது 10.6 ஹெச்பி வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கின் டார்க் 10.9 என்எம் ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஹோண்டா எஸ்.பி. 125 பைக் விலை

BS6 Honda SP125 – ரூ.76,224 (டிரம்)

BS6 Honda SP125 – ரூ.80,424 (டிஸ்க்)

(சென்னை எக்ஸ்ஷோரூம்)