Site icon Automobile Tamilan

2019 CB500 வகையில் புதிய வசதிகளை சேர்க்கிறது ஹோண்டா

CB500F, CBR500R மற்றும் CB500X என மூன்று மோட்டார் சைக்கிள்களிலும், டிசைன் மற்றும் இஞ்சின் போன்றவற்றை சில மாற்றங்களை ஹோண்டா நிறுவனம் செய்துள்ளது. CB500 வகை மோட்டார் சைக்கிள்களில் மேம்படுத்தப்பட்ட ஸ்டைல்களுடன் முழு LEd லைட்டிங் செட்டப் செய்யப்பட்டுள்ளது. மெக்கானிக்கல் ரீதியாக புதிய ரியர் சஸ்பென்சன், சிலிப் அசிஸ்ட் கிளட்ச், டூயல் எக்ஸ்ஹாஸ்ட் கேன் உள்பட பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் 471cc லிக்யுட் கூல்டு பேர்லல் டுவின் இன்ஜின் கொண்டதாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

தயாரிப்பு நிறுவனங்களின் படி, 2019 மாடல்கள், தற்போது 3000rpm முதல் 7000rpm அளவுக்கு இடைப்பட்ட ஆற்றலில் இயங்கும். இந்த இன்ஜின்கள் 47.5PS ஆற்றலுடன் 43Nm டார்க்யூ கொண்டிருக்கும். இத்துடன் இந்த இன்ஜின்கள் 6 ஸ்பீட் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

கூடுதலாக, டிரியோ வசதிகளாக ரியர் சஸ்பென்ஷன், சிலிப் அசிஸ்ட் கிளட்ச், முழு LED லைட்டிங், LCD இன்ஸ்டுரூமென்ட் கன்சோல்களுடன் கியர் பொசிஷன் மற்றும் கியர் ஷிப்ட் இண்டிகேட்டர்கள் மற்றும் புதிய டூயல் எக்ஸாஸ்ட் மற்றும் கேன்களை கொண்டுள்ளது.

CB500F மோட்டார் சைக்கிள்கள், டேங்க் வசதிகளுடன் கூடிய பெட்ரோல் டேங்க் கொண்டிருக்கும். CBR500R மோட்டார் சைக்கிள்கள் புதிய டிசைன்களுடன் CBR1000RR மற்றும் ஸ்போட்டியர் ரைடிங் பொசிஷன் கொண்டதாக இருக்கும்.

CB500X மேம்படுத்தப்பட்டு பெரிய 19 இன்ச் பிராண்ட் வீல்களுடன், நீண்ட டிராவல் சஸ்பென்சன் கொண்டதாக இருக்கும். இருந்தபோதும் CB500F, CBR500R மற்றும் CB500X எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்பது தெரியாமலேயே உள்ளது.

Exit mobile version