2017 ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டர் அறிமுகம்

மேம்படுத்தப்பட்ட 2017 ஹோண்டா ஏவியேட்டர் ஸ்கூட்டர் மாடல் ரூ.61,113 ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிஎஸ் 4 எஞ்சினுடன் ஏஹெச்ஒ ஆப்ஷனை பெற்றதாக ஏவியேட்டர் வந்துள்ளது.

2017 ஹோண்டா ஏவியேட்டர்

  • பாரத் ஸ்டேஜ் 4 நடைமுறை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றது.
  • ஒளி குறைவான இடங்களில் தானாகவே ஒளிரும் முகப்பு விளக்கினை ஏவியேட்டர் பெற்றுள்ளது.
  • டிரம் மற்றும் டிஸ்க் பிரேக் ஆப்ஷன்களில் கிடைக்கின்றது.

பி.எஸ் 4 தர 109.19CC  கொண்ட ஒற்றை சிலிண்டர் அதிகபட்சமாக 8 ஹெச்பி பவருடன் ,  8.94 டார்க்கினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள எஞ்சினில் சிறப்பான மைலேஜ் தரும் நோக்கில் ஹோண்டா நிறுவனத்தின் காப்புரிமை பெற பெற்ற ஹோண்டா ஈக்கோ நுட்பத்தினை பெற்றதாக வந்துள்ள ஏவியேட்டரில் சக்கரங்களுக்கு ஆற்றலை எடுத்துச் செல்ல சிவிடி ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஆக்டிவா ஸ்கூட்டரின் அதே என்ஜினை ஏவியேட்டர் பெற்றிருந்தாலும் கூடுதலான நீளம் மற்றும் உயரத்தை பெற்றிருப்பதுடன் முன்பக்க டிஸ்க் பிரேக் ஆப்ஷனாலாக இடம்பெற்றுள்ளது. மேலும் முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் , பின்பக்கத்தில் ஹைட்ராலிக் வகை சஸ்பென்ஷனையும் பெற்றதாக உள்ளது.

இருக்கையின் அடியில் அமைந்துள்ள ஸ்டோரேஜ் பெட்டியில் மொபைல் சார்ஜிங் யூஎஸ்பி போர்ட் வசதியுடன் வெள்ளை, சிவப்பு , கருப்பு மற்றும் சில்வர் என நான்கு விதமான நிறங்களில் 2017 ஹோண்டா ஏவியேட்டர் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

புதிய ஹோண்டா ஏவியேட்டர் விலை

கீழே கொடுக்கப்பட்டுள்ள விலை பட்டியல் சென்னை எக்ஸ்-ஷோரூம் மற்றும் ஆன்ரோடு விபரம்..

நகரம் வேரியன்ட் விபரம் எக்ஸ்-ஷோரூம் ஆன்-ரோடு
சென்னை AVIATOR DISK 60099 67070
AVIATOR DRUM 54659 61133
AVIATOR DISK (BS-IV) 59561 66483
AVIATOR DRUM (BS-IV) 55106 61622
Aviator Drum Alloy (BS-IV) 57086 63782

Honda Aviator BS-IV launched details in Tamil

Share
Published by
automobiletamilan

Recent Posts

இந்தியாவில் பிஎஸ்6 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்

அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…

2021/02/25

6 & 7 இருக்கையில் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி டீசர் வெளியானது

5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…

2021/02/24

ரூ.5.73 லட்சம் ஆரம்ப விலையில் மாருதி ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியானது

இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…

2021/02/24

சோதனை ஓட்டத்தில் டொயோட்டா RAV4 எஸ்யூவி., இந்தியா வருகையா.?

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…

2021/02/24

பியாஜியோ அபே எலக்ட்ரிக் ஆட்டோ FX விலை ரூ.2.84 லட்சம்

பியாஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அபே E-City FX, E-Xtra FX (Fixed Battery) எலக்ட்ரிக் ஆட்டோ பயணிகள் மற்றும் சுமை…

2021/02/24

2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் டீசர் வெளியானது

இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற ஹேட்ச்பேக் கார்களில் முதன்மையாக விளங்கும் மாருதியின் ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சிறிய…

2021/02/23