வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி புதிய பைக் மாடல் ஒன்றை வெளியிட உள்ளதை அதிகாரப்பூர்வமாக டீசர் வீடியோ மூலம் ஹோண்டா டூ வீலர்ஸ் இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது.
மிகவும் பிரசத்தி பெற்ற மாடலான சிபி ஹார்னெட் 160 ஆர் வெற்றியை தொடர்ந்து பிஎஸ்-6 இன்ஜின் மேம்பாடு வழங்கப்படாத நிலையில் வெளியாகியுள்ள டீசர் மூலம் இந்த பைக் அனேகமாக ஹார்னெட் மாடலாகவும், அதே நேரத்தில் கூடுதல் சிசி அதாவது 200சிசி மாடலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது தனது யூடியூப் பக்கத்தில் ஹோண்டா வெளியிட்டுள்ள டீசரில் பைக்கின் முன்புறம் மிக நேர்த்தியான ஷார்ப் எட்ஜ் கொண்டு எல்இடி ஹெட்லைட், யூஎஸ்டி ஃபோர்க், நெகட்டிவ் எல்சிடி டிஜிட்டல் கிளஸ்ட்டரில் கியர் பொசிஷன் இன்டிகேட்டர் கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது.
அனேகமாக வரவுள்ள புதிய ஹார்னெட் 200ஆர் பைக்கின் வடிவ அமைப்பு முந்தைய மாடலின் மேம்பட்டதாகவும் சிறப்பான பவரினை வழங்குவதுடன் போட்டியாளர்களான அப்பாச்சி ஆர்டிஆர் 200, பல்சர் என்எஸ் 200 மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 போன்றவற்றை எதிர்கொள்ளும் திறனுடன் விளங்கலாம்.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…