Automobile Tamil

ஹோண்டா யூனிகார்ன் 150 பைக்கில் ஏபிஎஸ் பிரேக் வந்தது

பிரசத்தி பெற்ற 150சிசி மாடலாக விளங்கும் ஹோண்டா யூனிகார்ன் 150 பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. சாதாரன மாடலை விட ரூ.6,500 வரை ஏபிஎஸ் பிரேக உயர்த்தப்பட்டுள்ளது.

யூனிகார்ன் 160 பைக்கினை விட யூனிகார்ன் 150 பைக் மீதான ஈர்ப்பு தொடர்ந்து இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்தே உள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் உடன் ட்யூப்லெஸ் டயர் சேர்க்கப்பட்டுள்ளது.

ஹோண்டா யூனிகார்ன் 150 பைக்கின் சிறப்புகள்

12.91 BHP பவரையும், 12.80 Nm டார்க் வழங்குகின்ற 149.2 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜினை பெற்றுள்ளது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கின் மிக சிறப்பான தரம் தொடர்ந்து இந்த பைக்கினை மிகவும் சவலான மாடலாக நிலை நிறுத்தியுள்ளது.

முன்பாக 2015 ஆம் ஆண்டில் 160சிசி யூனிகார்ன் பைக் வந்த காலத்தில் கைவிடப்பட்ட யூனிகார்ன் 150 பைக்கினை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த பைக்கில் தொடர்ந்து முன்புறத்தில் சிங்கிள் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் கொண்டதாக உள்ளது.

வருகின்ற ஏப்ரல் 1 முதல் ஏபிஎஸ் அல்லது சிபிஎஸ் பிரேக் பெற்ற மாடல்கள் மட்டும் விற்பனை செய்ய இயலும் என்பதனால் 125சிசி க்கு குறைந்த பைக் மற்றும் ஸ்கூட்டரில் சிபிஎஸ் மற்றும் அதற்கு மேலுள்ள இரு சக்கர வாகங்களில் ஏபிஎஸ் கட்டாயமாகும்.

ஹோண்டா சிபி யூனிகார்ன் 160 பைக் விலை 78,815 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version