30 லட்சம் இலக்கை கடந்த ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனை

இந்தியா உட்பட சர்வதேச அளவில் சுமார் 30 லட்சம் ஹோண்டா டியோ ஸ்கூட்டர்களை விற்பனை செய்து ஹோண்டா இந்தியா புதிய சாதனையை எட்டியுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் டியோ ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகின்றது. குறிப்பாக இந்த ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கையில் 15 லட்சம் இலக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பதிவு செய்துள்ளது.

இந்நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகனமாக விளங்கும் நிலையில்,  டியோ ஸ்கூட்டர் அதிகம் விற்பனையாகின்ற பட்டியலில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது.

ஹோண்டா டியோ ஸ்கூட்டர்

சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட டியோ ஸ்கூட்டர் மாடலில் 109.2cc கொள்ளளவு கொண்ட சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பெற்று அதிகபட்சமாக 8 bhp திறனும் 8.9 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. எல்இடி ஹைட்லைட், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் உள்ளிட்ட அம்சங்களை கொண்ட இந்த ஸ்கூட்டரில் ஒன்பது விதமான நிறங்களை கொண்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட டியோ ஸ்கூட்டர் முதல் 14 வருடங்களில் 15 லட்சம் இலக்கையும், கடந்த மூன்று ஆண்டுகளில் 15 லட்சம் இலக்கையும் கடந்துள்ளது. குறிப்பாக இந்தியா உட்பட ஏற்றுமதி சந்தை பங்களிப்பை 44 சதவீதம் பெற்றுள்ள இந்த ஸ்கூட்டரானது இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் மாடல்களில் ஒன்றாகும். தெற்காசியா, கொலம்பியா, நேபால், மெக்சிக்கோ, இலங்கை மற்றும் லத்தின் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு டியோ ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

Exit mobile version