2 லட்சம் விற்பனை இலக்கை எட்டியது ஹோண்டா கிரேசியா

இந்தியா மார்க்கெட்டில் பயணிக்க எளிமையான வாகனமாக ஸ்கூட்டர்கள் மாறி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக 125cc ஸ்கூட்டர்களுக்கு அதிக டிமாண்ட் அதிகரித்துள்ளது. இந்த டிமாண்டை கருத்தில் கொண்டு ஹோண்டா நிறுவனம், தனது ஹோண்டா கிரேசியா ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்தது. க்ராஸ்யா ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்த 11 மாதங்களில் இருந்து இதுவரை 2 லட்சம் யூனிட்கள் விற்பனை இலக்கை எட்டியுள்ளது.

வெறும் மூன்றே மாதத்தில் 50,000 விற்பனை இலக்கை தொட்ட க்ராஸ்யா ஸ்கூட்டர்கள், அதிகம் விற்பனையாகும் டாப் 10 ஸ்கூட்டர்கள் பட்டியலில் நுழைந்தது. க்ராஸ்யா ஸ்கூட்டர்களின் ஸ்டைல், LED ஹெட்லேம்கள், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிள்ச்சர்களுடன் 3 ஸ்டெப் எக்கோ ஸ்பீட் இண்டிகேட்டர்களையும் கொண்டுள்ளது. மேலும் இதில் ஆப்சனாக ஸ்மார்ட்போன் சார்ஜிங் வசதியும் உள்ளது.

க்ராஸ்யா ஸ்கூட்டர்கள், 124.9cc இன்ஜின்களுடன் 8.5bhp மற்றும் 10.54Nm டார்க்யூ கொண்டதாக இருக்கும். க்ராஸ்யா ஸ்கூட்டர்கள் அடிப்படை விலையாக 59,222 ரூபாயாக உள்ளது, இதுவே டிஸ்க் பிரேக் பொருத்தப்பட வகையாக இருந்தால் 64,293 ரூபாயாக உள்ளது (எக்ஸ் ஷோ ரூம் விலை டெல்லியில்). ஹோண்டா க்ராஸ்யா ஸ்கூட்டர்கள், TVS NTorq 125, ஹோண்டா ஆக்டிவா 125, சுசூகி பர்கமன் ஸ்ட்ரீட், சுசூகி அக்சஸ் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹீரோ டெஸ்டினி 125 ஆகிய ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இருந்து வருகிறது.

Exit mobile version