ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் அறிமுக தேதி விபரம்

0

honda grazia scooter teaserஇந்தியாவின் இருசக்கர வாகன துறையில் ஸ்கூட்டர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் புதிய ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் நவம்பர் 8ந் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ளது.

ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர்

Honda Grazia spied front

இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற ஆக்டிவா 4ஜி ஸ்கூட்டர் மற்றும் ஆக்டிவா 125 ஆகிய மாடல்களை விட மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சத்தை பெற்ற மாடலாக நவீன தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற அம்சங்களை கொண்டதாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advanced Urban Scooter என்ற நோக்கத்தை கொண்டு மிக நவீனத்துவமான தோற்ற பொலிவினை வழங்கும் வகையில் முகப்பில் இரட்டை பிரிவு ஹெட்லைட் பெற்றதாகவும் வெளியாகியுள்ள

கிரேசியா ஸ்கூட்டர் மாடலில் இடம்பெற்றுள்ள எஞ்சின் பற்றி எவ்விதமான உறுதியான தகவலும் வழங்கப்படவில்லை, விற்பனை செய்யப்பட்டு வரும் ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள அதே 8.52  ஹெச்பி குதிரைதிறன் வெளிப்படுத்தும் ஹெச்இடி என்ஜின் இடம்பெற்றிருக்கலாம் அல்லது 150சிசி எஞ்சினை பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

Honda Grazia spied instrument cluster

பாதுகாப்பு

முன்புற சக்கரத்தில் டிஸ்க் பிரேக் வசதியுடன் ஹோண்டாவின் காம்பி பிரேக்கிங் சிஸ்டம் (Combi Brake System- CBS) இணைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மிக சிறப்பான பிரேக்கிங் திறனை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கும். மேலும் சரிவான இடங்களில் கிரேஸியா ஸ்கூட்டரை நிறுத்துவதற்கு உதவும் வகையில் பார்க்கிங் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

வசதிகள்

ஸ்டைலிஷான அர்பன் ஸ்கூட்டராக விளங்கும் கிரேசியா மாடலில் உள்ள முன்புற அப்ரான் பகுதியில் சிறிய அளவிலான ஸ்டோரேஜ் வசதி, மொபைல் சார்ஜிங் போர்ட், கீ அருகாமையில் இருக்கையை திறக்கும் வகையிலான அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

Honda Grazia spied apron

முன்பதிவு

ரூ.2000 செலுத்தி நாடு முழுவதும் உள்ள ஹோண்டா டீலர்கள் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். ரூ.65,000 விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் நவம்பர் 8ந் தேதி விற்பனைக்கு வெளியிடப்படுகின்றது.