ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

0

honda grazia launchedரூ.60,277 ஆரம்ப விலையில் ஹோண்டா கிரேஸியா ஸ்கூட்டர் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிரேஸியா ஸ்கூட்டரில் 125சிசி எஞ்சின் கொண்டாதாக வெளியாகியுள்ளது.

ஹோண்டா கிரேஸியா

honda grazia scooter

Google News

இந்தியாவில் இருசக்கர வாகன பிரிவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்கூட்டர் சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் வாயிலாக சந்தையின் முன்னணி மாடலாக விளங்கி வரும் நிலையில் நகர்புற மக்களுக்கு ஏற்ற வகையிலான அம்சங்களை கொண்ட ஸ்கூட்டராக கிரேஸியா வெளியாகியுள்ளது.

ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 125சிசி எஞ்சின் தற்போது கிரேஸியா ஸ்கூட்டரிலும் சேர்க்கப்பட்டுள்ளது. கிரேசியா மாடலில் ஹெச்இடி நுட்பத்தை பெற்ற 8.52 பிஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 124.9 cc எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 10.54 Nm ஆகும். இதில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

கிரேஸியா ஸ்கூட்டரின் தோற்ற அமைப்பில் மிகவும் ஸ்டைலிஷான வி வடிவ அமைப்பில் எல்இடி ஹெட்லைட் பெற்றதாக நவீனத்துவமான அம்சங்களுடன் 4 விதமான லாக்கர்களை திறக்க வகையிலான ஸ்மார்டர் லாக் வழங்கப்பட்டிருப்பதுடன், மொபைல் போன் வைப்பதற்கான யூட்டிலிட்டி வசதி வழங்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குடன் 12 அங்குல வீல் பெற்றுள்ள கிரேசியா மாடலில் முன்புறத்தில் 190 மிமீ டிஸ்க் பிரேக் அல்லது 130 மிமீ டிரம் பெற்றதாகவும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் பிரேக் அம்சத்துடன் காம்பி பிரேக் சிஸ்டத்தை பெற்றுள்ளது.

மொத்தம் மூன்று விதமான வகைகளில் கிடைக்கின்ற கிரேஸியாவில் ஆரஞ்சு, கருப்பு, சிவப்பு, வெள்ளை, கிரே மற்றும் நீலம் ஆகிய நிறங்களுடன் கிடைக்கும்.

ஹோண்டா கிரேஸியா விலை பட்டியல்
Honda Grazia Standard Honda Grazia Alloy Honda Grazia Deluxe
ரூ.60,277 ரூ.62,208 ரூ.64,649

(சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை )