இந்தியாவில் ஹோண்டா க்ரூம், ஸ்கூப்பி அறிமுகம் சாத்தியமில்லை

இந்தியா மோட்டார் சைக்கிள் சந்தையில் மிகப்பெரிய பங்களிப்பை பெற்றுள்ள ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா க்ரூம் மினி பைக், மற்றும் ஹோண்டா ஸ்கூப்பி ஸ்கூட்டர் சோதனை ஓடத்தில் ஈடுபட்ட படங்கள் வெளியாகியது.

ஹோண்டா க்ரூம், ஸ்கூப்பி

இந்திய சந்தையில் ஸ்கூட்டர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஹோண்டா நிறுவனம் இந்த வருடத்தில் 4 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக, குறிப்பிட்டிருந்த நிலையில் ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் மற்றும் கிளிக் ஸ்கூட்டர் என இரு மாடல்களை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் சாலை சோதனையில் ஈடுபட்ட ரெட்ரோ தோற்றம் பெற்ற ஸ்கூப்பி மற்றும் மினிபைக் க்ரூம் என இரண்டு மாடல்களும் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இது குறித்து மூத்த ஹோண்டா அதிகாரி ஒருவர் ஆட்டோ என்டிடிவி-க்கு அளித்துள்ள தகவலில் இந்தியாவில் சோதனை செய்யப்படுகின்ற மாடல்கள் எல்லாம் இந்திய சந்தையில் வெளியிட வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் இரண்டு புதிய மாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ள இந்நிறுவனம் 125 சிசி சந்தையில் கிளாசிக் ரக வடிவமைப்பு பெற்ற ஸ்கூட்டர் மற்றும் 125சிசி சந்தையில் மற்றொரு மோட்டார் பைக் மாடல் ஒன்றை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Recommended For You