Automobile Tamil

ஹோண்டா லிவோ பிஎஸ்-6 பைக்கின் 5 முக்கிய சிறப்புகள்

புதிதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள மேம்பட்ட பிஎஸ்-6 மாசு உமிழ்வுக்கு இணையான இன்ஜினை பெற்ற ஹோண்டா லிவோ பைக்கின் மிக முக்கியமான 5 சிறப்புகளை பற்றி தொகுத்து அறிந்து கொள்ளலாம்.

110சிசி சந்தையில் பிரீமியம் அம்சங்களை பெற்றுள்ள லிவோ மாடலின் ஸ்டைலிங் அம்சங்கள், சில கூடுதல் வசதிகள் பெற்று புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் முந்தைய பிஎஸ்4 மாடலில் இருந்து வேறுபடுத்துகின்றது.

டிசைன் அம்சம்

குறிப்பாக பைக்கின் தோற்ற அமைப்பில் பெரும்பாலான ஸ்டைலிங் ட்விக்ஸ் மேம்பாடுகளை கொண்டதாக அமைந்துள்ளது. குறிப்பாக பெட்ரோல் டேங்கின் கூர்மையான ஷோர்ட்ஸ், மேம்பட்ட வைஷர், 17 மிமீ வரை நீட்டிக்கப்பட்ட இருக்கை, செமி டிஜிட்டல் கிளஸ்ட்டர் டிசைன் புதுப்பிக்கப்பட்டு கூடுதலாக சர்வீஸ் இன்டிகேட்டர், புதுப்பிக்கப்பட்ட சுவிட்சு கியர் மற்றும் மேம்பட்ட பாடி கிராபிக்ஸ் கூடுதல் கவர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

லிவோ பைக் இன்ஜின்

புதிய பிஎஸ்-6 முறைக்கு மேம்பட்ட ஹோண்டா லிவோ பைக் மாடலில் உள்ள 110 சிசி இன்ஜின் PGM-FI HET (Honda Eco Technology) நுட்பத்துடன் அதிகபட்சமாக 8.67 hp பவரை 7500 ஆர்பிஎம்-லும், 9.30 Nm டார்க் 7500 ஆர்பிஎம்-ல் வழங்குகின்றது. தொடர்ந்து 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

Enhanced Smart Power (eSP) சிஸ்டத்தை பெற்றுள்ளதால் சத்தமில்லாமல் ஸ்டார்ட் செய்யும் வசதி, குறைந்த உராய்வு மற்றும் எஃப்ஐ அம்சத்தைக் கொண்டுள்ளது.

மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் மாடலாக லிவோ பைக் விளங்கும் என்பதனால் சராசரியாக 65 கிமீ கிடைக்க வாய்ப்புள்ளது.

பிஎஸ்-6 ஹோண்டா லிவோ

வசதிகள்

டிசி ஹாலஜென் பல்ப், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் ஆஃப் சுவிட்சு, இருபக்க டயர்களிலும் 130 மிமீ டிரம் பிரேக் அல்லது முன்புறத்திலெ 190 மிமீ டிஸ்க் பிரேக் பெற்று கூடுதலாக சிபிஎஸ் (Combi-Brake System – CBS ) பிரேக்கிங் திறனை கொண்டதாக அமைந்துள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் டைப் ஷாக் அப்சார்பர் பெற்றதாக அமைந்திருக்கின்றது.

டிரம் அல்லது டிஸ்க் என இரண்டு ஆப்ஷன்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். இந்த மாடலில் அத்தெலெட்டிக் ப்ளூ மெட்டாலிக், பிளாக், இம்பீரியல் ரெட் மெட்டாலிக், மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் என நான்கு நிறங்களை கொண்டுள்ளது.

பிஎஸ்-6 ஹோண்டா லிவோ பைக் கிளஸ்ட்டர்

போட்டியாளர்கள்

ஹோண்டாவின் லிவோ பைக்கிற்கு நேரடியான போட்டியை ஏற்படுத்தும் ஹீரோ பேஸன் புரோ விலை ரூ.66,000-ரூ.68,200, பிளாட்டினா 110 ஹெச் கியர் விலை ரூ.63,283, டிவிஎஸ் ரேடியான் போன்ற மாடல்கள் உள்ள நிலையில், இந்த பைக்கிற்கு இணையான விலையில் 125சிசி மாடல்கள் ஹோண்டா ஷைன் விலை ரூ.72,087-ரூ.76,787, ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் ரூ.71,501-ரூ.75,001, ஹீரோ கிளாமர் ரூ.71,622-75,122, பஜாஜ் பல்சர் 125 நியான் விலை ரூ.73,989 முதல் ரூ.78,739 ஆகும்.

ஹோண்டா லிவோ விலை

ஹோண்டா லிவோ பைக்கின் டிரம் பிரேக் விலை ரூ.72,514. தற்போது வரை டிஸ்க் பிரேக் மாடலின் விலை அறிவிக்கப்படவில்லை. ஹோண்டா பைக்குகளுக்கு 3 வருட வாரண்டி மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி 3 ஆண்டுகள் வரை வழங்கப்படுகின்றது.

(கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் எக்ஸ்ஷோரூம் சென்னை விலை)

Exit mobile version