ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், 2020 வருட முடிவினை முன்னிட்டு, எஸ்பி 125, ஹார்னெட் 2.0, ஆக்டிவா 6ஜி, கிரேஸியா 125 மற்றும் சிடி 110 ட்ரீம் ஆகிய மாடல்களுக்கு சிறப்பு கேஷ்பேக் சலுகையாக ரூ.5,000 வழங்குகின்றது.
ஐ.சி.ஐ.சி.ஐ, ஃபெடரல் வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், பாங்க் ஆப் பரோடா மற்றும் யெஸ் வங்கி ஆகிய வங்கிகளில் ஏதேனும் ஒன்றிலிருந்து வாடிக்கையாளர்கள் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் வாங்க வேண்டும். அவ்வாறு ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இரு சக்கர வாகனத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது சலுகையின் பலன்களைப் பெறலாம்.
இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற ஸ்கூட்டர்களில் ஒன்றாக ஆக்டிவா 6ஜி மாடல் விளங்குகின்றது. இந்த ஸ்கூட்டரில் புதிய 110சிசி இன்ஜின் பொருத்தப்பட்டு, அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.79 hp பவர் மற்றும் 5,250 ஆர்பிஎம்-ல் 8.79 NM டார்க் வழங்குகின்றது.
ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் உள்ள 184சிசி ஒற்றை சிலிண்டர் ஏர்கூல்டு PGM-FI HET (Honda Eco Technology) இன்ஜின் 8500 RPM சுழற்சியில் 17.03 ஹெச்பி பவர் மற்றும் 6000 RPM சுழற்சியில் 16.1 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பல்சர் பைக் வரிசையில் முதன்முறையாக 250சிசி இன்ஜின் பெற்ற மாடல் விற்பனைக்கு வெளியிடப்படலாம்…
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 கோடி பைக்குகளின் உற்பத்தியை கொண்டாடும் வகையில் வெளியிட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 160R 100 மில்லியன் எடிஷன்…
அடுத்த சில நாட்களில் விலை அறிவிக்கப்பட உள்ள புதிய 2021 கவாஸாகி நின்ஜா 300 பைக்கின் படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால்…
5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில்…
இரு வண்ண கலவை நிறத்தை பெற்ற புதிய 2021 மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ரூ.5.73 லட்சம் முதல் அதிகபட்சமாக…
சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்ற டொயோட்டா RAV4 க்ராஸ்ஓவர் எஸ்யூவி இந்தியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுகின்ற…