Site icon Automobile Tamil

அதிர்ச்சியில் ஹோண்டா., நவி, கிளிக் ஸ்கூட்டர் விற்பனை படுமோசம்

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின், இந்திய சந்தைக்கு ஏற்ற மாடலாக அறிமுகம் செய்யப்பட்ட ஊரக பகுதிக்கான ஹோண்டா கிளிக் மற்றும்  ஹோண்டா நவி மினி பைக் ஆகிய இரு மாடல்களும் மார்ச் 2018 மாத முடிவில் படு மோசமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

ஹோண்டா நவி

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட ஹோண்டா நவி மினி பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்ட ஆரம்ப காலத்தில் அமோகமான ஆதரவை பெற்றிருந்த இந்த மாடல் அறிமுகம் செய்த ஒரே வருடத்தில் 50,000 எண்ணிக்கையை பதிவு செய்திருந்த நிலையில், ஆனால் கடந்த சில மாதங்களக விற்பனை எண்ணிக்கையை சிறப்பாக பதிவு செய்யாத நிலையில் மார்ச் 2018 மாதந்திர விற்பனை முடிவில் 0 எண்ணிக்கையை மட்டுமே பதிவு செய்துள்ளது.

ஊரக பகுதி சந்தைக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா கிளிக் ஸ்கூட்டர் பெரிதாக விற்பனை எண்ணிக்கையை தொடர்ந்து பதிவு செய்ய தவறி வருகின்றது. கடந்த மார்ச் மாத முடிவில் 835 எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இரு மாடல்களிலும் ஹோண்டாவின் பிரசத்தி பெற்ற ஹெச்இடி நுட்பத்தை கொண்ட 110சிசி எஞெசின் பொருத்தப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர், சிபி ஷைன், டியோ ட்ரீம் பைக்குகள் மற்றும் கிரேசியா போன்றவை சந்தையில் சிறப்பான வளர்ச்சியை கண்டு வருகின்றது.

Exit mobile version