5 ஸ்பீடு கியர்பாக்ஸ்.., புதிய ஹோண்டா ஷைன் 125 விற்பனைக்கு அறிமுகம்

Honda Shine BS6 price

ரூ.67,837 ஆரம்ப விலையில் வெளியிடப்படுள்ள புதிய ஹோண்டா ஷைன் 125 பைக்கில் தற்போது 5 வேக கியர்பாக்ஸ் உடன் கூடிய 125சிசி பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் அதிகம் விற்பனை ஆகின்ற 125சிசி மாடலாக உள்ள ஷைன் பைக்கில் தற்போது புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் உடன் தோற்ற அமைப்பில் வேறு எந்த மாறுதல்களும் பெறாமல் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாக பிஎஸ்6 என்ஜினை பெற்ற எஸ்பி 125 பைக் பிரீமியம் விலையில் விற்பனை செய்யப்படுவதனால் அதற்கு மாற்றாக கிளாமர் 125 மற்றும் பல்சர் 125 நியான் போன்றவற்றுக்கு சவாலாக அமைந்துள்ளது.

எஸ்பி 125 பைக்கில் உள்ள அதே 125சிசி என்ஜினை பெற்றுள்ள இந்த மாடல் இப்போது முந்தைய பிஎஸ்4 மாடலை விட 14 % வரை கூடுதலான எரிபொருள் சிக்கனத்தை வழங்குகின்றது.

ஹோண்டாவின் eSP (Enhanced Smart Power) நுட்பத்தின் மூலம் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்ட என்ஜினை பெற்றுள்ளது. இந்த நுட்பம் PGM-FI, குறைந்த உராய்வு மற்றும் ACG ஸ்டார்டர் என மூன்று அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

புதிய வசதிகளுடன் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 124 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 124.73 சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு ஹோண்டா ஷைன் 125 ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பெற்றதாக வரவுள்ள இந்த மாடலின் பவர் தற்பொழுது 10.6 ஹெச்பி வெளிப்படுத்துகின்றது. இந்த பைக்கின் டார்க் 10.9 என்எம் ஆகும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் டிஸ்க் அல்லது இரு பக்க டயர்களிலும் டிரம் பிரேக் பெற்றுள்ள புதிய சைன் பைக்கில் புதிய கிளஸ்ட்டருடன் சிறப்பான ஸ்டெபிளிட்டி வழங்கும் நோக்கில் பைக்கின் வீல்பேஸ் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற புதிய ஹீரோ கிளாமர் 125 பைக், பஜாஜ் பல்சர் 125 மற்றும் யமஹா சல்யூட்டோ 125 போன்றவை கடுமையான சவாலினை ஷைன் மாடலுக்கு ஏற்படுத்துகின்றன.

பிஎஸ்6 ஹோண்டா ஷைன் விலை

SHINE DRUM – BSVI Rs.71132

SHINE DISC – BSVI Rs.75832

(ex-showroom Chennai)

Exit mobile version