யமஹா பைக்குகள் ஆன்லைன் விற்பனை துவங்கியது

யமஹா FZS 25

இந்தியா யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஆன்லைன் விற்பனையகத்தை Virtual Store என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக யமஹா பைக்குகள் மட்டும் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.5,000 வசூலிக்கப்படுகின்றது.

கோவிட்-19 பரவலால் பெரும்பாலான மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் ஆன்லைன் விற்பனை முறையை துவங்கி வரும் நிலையில், யமஹாவின் விரிச்சுவல் விற்பனையகத்தில் முதற்கட்டமாக யமஹா YZF R15 V3.0, MT 15, FZ 25, FZS 25, FZS FI V3.0 மற்றும் FZ FI V3.0 ஆகியவற்றின் விற்பனை துவங்கியுள்ளது. மற்றபடி ஸ்கூட்டர் மாடல்கள் தற்போதைக்கு இணைக்கப்படவில்லை.

வாடிக்கையாளர்கள் வீட்டு வாசலில் விநியோகிக்கும் முறையில் யமஹா டீலர்ஷிப்கள் தங்கள் ஆதரவைக் கொடுக்கும் என்றும் வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பு இல்லாத விநியோகத்தை வழங்கும் என யமஹா குறிப்பிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் ஆவணங்களுக்கும் பூர்த்தி செய்வதற்கும் எந்தவொரு கேள்விகளுக்கும் பதிலளிப்பதற்கும், அவர்கள் வாட்ஸ்அப் போன்ற டிஜிட்டல் தகவல்தொடர்பு கருவிகளை மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது.

யமஹா சென்னையிலிருந்து ஆன்லைன் விற்பனை துவங்கப்பட்டு, இந்த ஆண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் 300 க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்களை ஒருங்கிணைக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆடைகளை ஆன்லைனில் வாங்குவதற்கான வசதியும் உள்ளது.

மேலும் விபரங்களுக்கு – https://shop.yamaha-motor-india.com/

சமீபத்தில் இந்நிறுவனத்தின் யமஹா எம்டி-15 பைக்கின் விலை ரூ.1000 வரை உயர்த்தப்பட்டு, இப்போது ரூ.1,39,900 முதல் ரூ.1,40,900 வரை விற்பனைக்கு கிடைக்கின்றது. அடுத்தப்படியாக, ரே இசட் ஆர் 125, ரே இசட் ஆர் ஸ்டீரிட் ரேலி 125 என இரு மாடல்களும் ரூ.2,000 வரை விலை உயர்த்தப்பட்டு, இப்போது ரூ.69,530 முதல் ரூ.73,530 ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version