1 கோடி 2 சக்கர வாகனங்களை உற்பத்தி செய்த யமஹா மோட்டார் இந்தியா

India Yamaha Motor

34 ஆண்டுகால இந்தியா யமஹா மோட்டார் (India Yamaha Motor) நிறுவனம், நமது நாட்டில் 1 கோடி இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. தனது சென்னை ஆலையில் 1 கோடியாவது தயாரிப்பாக  FZS-FI வெர்ஷன் 3.0 மாடலை உற்பத்தி செய்துள்ளது.

கடந்த 1985 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட யமஹா மோட்டார் நிறுவனம், சென்னை, உத்தரபிரதேசத்தில் சர்ஜாபூர் மற்றும் ஹரியானாவில் ஃபரீதாபாத் போன்ற இடங்களில் மொத்தமாக மூன்று ஆலையை கொண்டுள்ளது.

இந்தியா யமஹா மோட்டார்

இந்தியாவில் பைக்குகளை கடந்து ஸ்கூட்டர் விற்பனையில் யமஹா தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகின்றது. குறிப்பாக ஒட்டுமொத்தமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள 1 கோடி வாகனங்களில் மோட்டார்சைக்கிள் மாடல்களின் பங்களிப்பு 77.88 லட்சமாகவும், ஸ்கூட்டர் மாடல்களின் பங்களிப்பு 22.12 லட்சமாக விளங்குகின்றது.

குறிப்பாக கடந்த 2012-2019 வரையிலான 7 ஆண்டுகளில் மட்டும் 50 லட்சம் டூ வீலர்களை உற்பத்தி செய்துள்ளது. ஸ்கூட்டர் மொத்த விற்பனையில் 44 சதவீத பங்களிப்பை யமஹா ஃபேசினோ கொண்டுள்ளது.

உற்பத்தி செய்யப்பட்ட 1 கோடி வாகனங்களில் 80 சதவீதம் சர்ஜாபூர் மற்றும் பரீதாபாத் ஆலைகளில் தயாரிக்கப்பட்டன. எஞ்சிய 20 சதவீத வாகனங்கள் சென்னையில் உள்ள புதிய ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 10 மில்லியன் வாகனங்களின் தயாரிப்பு நிகழ்ச்சியின் போது யமஹா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள், மிட்ஷீ & கோ நிறுவன அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Exit mobile version