Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

ஜாவா பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ், ரியர் டிஸ்க் பிரேக் வெளியானது

by MR.Durai
21 December 2018, 2:21 pm
in Bike News
0
ShareTweetSend

ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் ஜாவா, ஜாவா ஃபார்ட்டி டூ என இரண்டிலும் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் மற்றும் ரியர் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் இணைக்கப்பட்டு சாதரன மாடலை விட ரூ. 9000 விலை அதிகரிக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் எதிர்பார்க்கப்பட்ட டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் டிஸ்க் பிரேக்கினை தற்போதே வழங்கி வாடிக்கையாளர்களை ஜாவா நிறுவனம் அசத்தியுள்ளது. விற்பனைக்கு வெளியிடப்பட்ட மாடலில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் மற்றும் முன்புற டிஸ்க் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் இரண்டு மாடல்களான கிளாசிக் ரகத்திலான ஜாவா மற்றும் நவீனத்துவத்தை பெற்ற ஜாவா 42 மாடல்களில் தற்போது முன்புறம் 280 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 153 மிமீ டிரம் பிரேக் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் வேரியன்டாக பின்புற டயர்களுக்கு டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஜாவா பைக் என்ஜின்

இரட்டை  புகைப்போக்கி குழல் பெற்ற 293 சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 bhp பவரையும், 28 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த ஜாவா எஞ்சின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது.

கிளாசிக் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் வகையில் வட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், பெரும்பாலான பாகங்களுக்கு க்ரோம் பூச்சூ, அகலமான பின்புற மட்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களில் டபூள் கார்டில் அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது.

சமீபத்தில் புனே, பெங்களூரு நகரங்களில் டீலர்களை திறந்துள்ள இந்நிறுவனம் விரைவில் பல்வேறு முன்னணி நகரங்களில் டீலர்களை அமைக்க உள்ளது. ஆன்லைன் மற்றும் திறக்கப்பட்ட டீலர்கள் வாயிலாக அதிகப்படியான முன்பதிவுகளை ஜாவா பெற்று வருகின்றது. எனவே ஜாவா டூயல் சேனல் ஏபிஎஸ் மாடல் அடுத்த ஆண்டின் மத்தியில் டெலிவரி செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.

ஜாவா மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்

ஜாவா – ரூ. 1.64 லட்சம்

ஜாவா – ரூ. 1.73 லட்சம் (Dual Channel ABS)

ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.55 லட்சம்

ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.64 லட்சம் (Dual Channel ABS)

(டெல்லி விற்பனையக விலை)

Jawa and Jawa Forty Two Image Gallery

 

 

Related Motor News

ரூ.1.99 லட்சத்தில் புதிய ஜாவா 42 FJ வெளியானது

செப்டம்பர் 3ல் புதிய ஜாவா 42 விற்பனைக்கு வருகை..!

புதிய எஞ்சினுடன் 2024 ஜாவா 42 விற்பனைக்கு அறிமுகமானது

குறைந்த விலை 2024 ஜாவா 350 விற்பனைக்கு வெளியானது

புதிய நிறத்தில் ஜாவா 350 பைக் அறிமுகம் எப்பொழுது ?

ஸ்கிராம்பளர் பைக்கை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தும் ஜாவா

Tags: JawaJawa BikeJawa Forty two
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

tvs ntorq 125 race xp blaze blue

புதிய நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் XP வெளியானது

bmw-g-310-rr-teased

டீசர் மூலம் புதிய G 310 RR அறிமுத்தை உறுதி செய்த பிஎம்டபிள்யூ

12.5 கோடி இரு சக்கர வாகனங்களை விற்ற ஹீரோ மோட்டோகார்ப்

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

130கிமீ ரேஞ்ச் வழங்கும் ஹோண்டா WN7 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

ரூ.28.99 லட்சத்தில் 2025 ஹோண்டா CBR1000RR-R Fireblade SP அறிமுகமானது

ரூ.19.90 லட்சத்தில் பிஎம்டபிள்யூ S 1000 R பைக் விற்பனைக்கு வந்தது

ரூ.1.96 லட்சத்தில் 2025 ராயல் என்ஃபீல்டு மீட்டியோர் 350 அறிமுகமானது

நியோ ரெட்ரோ யமஹா XSR 155 நவம்பர் 11ல் அறிமுகம்

GST 2.0.., ராயல் என்ஃபீல்டின் 350cc மோட்டார்சைக்கிள்களின் முழு விலைப்பட்டியல்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan