ஜாவா , ஜாவா 42 பைக்குகளின் சிறப்பம்சங்கள் அறிவோம்

70, 80களில் ஜாவா பைக் என்றால் தனியான ரசிகர் கூட்டத்தை பெற்றிருந்த பிரசத்தி பெற்ற மோட்டார்சைக்கிள் நிறுவனங்களில் ஒன்றான ஜாவா மீண்டும் வெற்றிகரமாக தனது இரண்டு பைக்குகளை ஜாவா, ஜாவா 42 என்ற பெயரிலும் பாபர் ஸ்டைல் மாடலாக ஜாவா பெராக் என்ற பைக்கையும் வெளியிட்டுள்ளது.

மஹிந்திரா ஜாவா

மஹிந்திரா நிறுவனம் தொடர்ந்து இருசக்கர வாகன சந்தையில் மிக கடுமையான சவாலை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த முறை மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றிருந்த ஜாவா மோட்டார்சைக்கிள் பிராண்டை 2018 ஆம் ஆண்டுக்கு ஏற்ற முறையில் நவீனத்துவத்துடன் பழமை மாறாமல் தரவேண்டும் என்ற நோக்கில் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பொதுவாக பழைய மோட்டார்சைக்கிள் மாடல்களில் பெரும்பாலும் க்ரோம் சார்ந்த பாகங்களை அதிகம் பெற்றிருப்பதனை போன்றே ஜாவா என்ற பெயரில் ஒரு மாடலும் குறைந்த க்ரோம் பாகங்களுடன் ஸ்டைலிஷான அம்சத்தை பெற்றதாக ஜாவா ஃபார்ட்டி டூ மாடல் அமைந்துள்ளது.

ஜாவா என்ஜின்

ஜாவா ஃபார்ட்டி டூ மற்றும் ஜாவா என இரு மாடல்களிலும் இந்நிறுவனத்தின் இரட்டை  புகைப்போக்கி குழல் பெற்ற 293சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வடிவமைக்கப்படுள்ளது.

ஜாவா 42 மாடலில் சில குறிப்பிடதக்க மாற்றங்களாக குறைவான க்ரோம் பாகங்கள் , பின்புறம் பார்க்கும் கண்ணாடியில் மாற்றம், கிளஸ்ட்டரில் நவீனத்துவம் கொண்டுள்ளது. ஸ்டான்டர்டு ரக ஜாவா மாடலில் அதிகப்படியான க்ரோம் பாகங்கள் மற்றும் பழமையான தோற்றத்தை வெளிப்படுத்தும் கிளஸ்ட்டர் கொண்டிருக்கின்றது.

வட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், பெரும்பாலான பாகங்களுக்கு க்ரோம் பூச்சூ, அகலமான பின்புற மட்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களில் டபூள் கார்டில் அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்று முன்புறத்தில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உடன் கூடிய  280 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 153 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது.

14 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் கலனை கொண்டு ஜாவா மற்றும் ஜாவா 42 மாடல்களின் எடை 170 கிலோ மட்டுமே ஆகும். ஜாவா 42 மோட்டார்சைக்கிள் ஹாலிஸ் டீல், கெலக்டிக் பச்சை, ஸ்டார்லைட் நீலம், லூமோஸ் லைம், நெபுலா நீலம் மற்றும் காமட் சிவப்பு ஆகிய 6 வண்ணங்களிலும், ஜாவா கிளாசிக் வகையில் ஜாவா கருப்பு, ஜாவா மெரூன் மற்றும் ஜாவா கிரே ஆகிய மூன்று வண்ணங்களிலும் கிடைக்கும்.

ஜாவா போட்டியாளர் யார் ?

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கிளாசிக் 350 மாடலை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இரு மாடல்களும் அடுத்த சில வாரங்களில் மஹிந்திரா டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்ட உள்ள நிலையில், நீண்ட பாரம்பரியமிக்க என்ஃபீல்டு நிறுவனத்துக்கு சவாலை ஜாவா விடுக்கும் என எதிர்பார்த்தாலும் வலுவான என்ஃபீல்டு சந்தையை உடைக்க ஜாவா மிக கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

ஜாவா மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்

ஜாவா – ரூ. 1.64 லட்சம்

ஜாவா 42 – ரூ. 1.55 லட்சம்

(டெல்லி விற்பனையக விலை)

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மாடல் ஆரம்ப விலை ரூ. 1.40 லட்சம் ஆகும்.

Exit mobile version