90 ஆம் ஆண்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் வெற்றியாளர்கள் விபரம் வெளியானது

0

ஜாவா ஸ்பெஷல் எடிஷன்

ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் தொடங்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவுற்றதை முன்னிட்டு ஜாவா ஸ்பெஷல் எடிஷன் மாடல்களாக 90 யூனிட்டுகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டது. இந்நிலையில் முன்பதிவு செய்திருந்த வாடிக்கையாளர்களில் 90 நபர்களை லக்கி டிரா குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Google News

அக்டோபர் 22ஆம் தேதி நள்ளிரவுக்குள் முன்பதிவு செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுமே ஜாவா ஸ்பெஷல் எடிஷன் பைக்கினை பெற தகுதியுடைவர்களாகும். முன்புதிவு செய்த வாடிக்கையாளர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களில் 90 பயனாளர்களுக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிவப்பு மற்றும் ஐவரி வண்ண திட்டத்தில் வந்துள்ள ஸ்பெஷல் எடிஷனில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாடலுக்கும் வரிசையான எண் 90 வரை டேங்கில் வழங்கப்பட்டிருக்கும். இரட்டை  புகைப்போக்கி குழல் பெற்ற 293சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வடிவமைக்கப்படுள்ளது.

ஜாவா ஸ்பெஷல் எடிஷன் ரூ. 1.74 லட்சம் (Dual Channel ABS)

வெற்றியாள்களின் பெயர் விபரம் – https://www.jawamotorcycles.com/motorcycles/anniversaryedition/winners/

jawa bike jawa motorcycles Jawa Anniversary Edition