Automobile Tamilan

ரூ.1.43 கோடிக்கு ஜாவா மோட்டார்சைக்கிள் ஏலம், டெலிவரி துவங்கியது

ஜாவா நிறுவனத்தை திரும்ப இந்திய சந்தைக்கு மஹிந்திரா கொண்டு வந்த நிலையில் முதல் 100 ஜாவா பைக்குகளை இன்றைக்கு ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவனம் சிறப்பான துவக்கத்தை இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்குவதுடன் தொடங்கியுள்ளது.

முதல் 13 ஜாவா சிக்னேச்சர் எடிசன் பைக்குகளை ஏலம் விடப்பட்டதன் மூலம் ரூ.1.43 கோடியை ஜாவா திரட்டியுள்ளது. இவ்வாறு ஏலத்தின் முலம் திரட்டப்பட்ட தொகையை இந்திய ராணுவத்துக்கு வழங்குகின்றது.

ஜாவா மோட்டார்சைக்கிள்

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துக்கு மிகுந்த சவாலாக அமைந்துள்ள ஜாவா நிறுவனம், இந்தியாவில் ஜாவா கிளாசிக், ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் மாடல்களை வெளியிட்டது. இந்நிலையில் நீண்ட காத்திருப்புக்கு பின்னர், இன்றைக்கு 100 ஜாவா பைக்குகளை டெலிவரியை முன்னாள் ராணுவத்தினருக்கு வழங்கி துவங்கப்பட்டுள்ளது.

மேலும் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட 001 முதல் 100 மாடல்களின் வரிசையான சேஸ் நம்பரில் இருந்து 13 சிக்னேச்சர் எடிசன்களை ஏலம் விட்டுள்ளது.  குறிப்பாக 001 எண் கொண்ட பைக்கின் விலை அதிகபட்சமாக 45 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஏலத் தொகையாக ரூ.5 லட்சம் விலையில் 007 எண் கொண்ட பைக் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

இவ்வாறு ஏலத்தில் விடப்பட்ட பைக்குகளின் மூலம் 1 கோடியே 43 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் திரட்டப்பட்டுள்ளது. திரட்டப்பட்ட நிதியானது கொடி நாள் நிதியாக இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் குழந்தைகளுக்கான கல்விக்கு நன்கொடையாக வழங்கப்பட உள்ளது.

ஜாவா பைக் என்ஜின்

இரண்டு குழல் பெற்ற புகைப்போக்கி கொண்ட 293 சிசி ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC பயன்படுத்தப்பட்டுள்ள என்ஜின் அதிகபட்சமாக 27 bhp பவரையும், 28 NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த ஜாவா எஞ்சின் பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது.

வட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பக்கவாட்டில் இருக்கும் டூல் பாக்ஸ், பெரும்பாலான பாகங்களுக்கு க்ரோம் பூச்சூ, அகலமான பின்புற மட்கார்டு ஆகியவற்றை பெற்றுள்ள இந்த மோட்டார்சைக்கிள்களில் டபூள் கார்டில் அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குடன், பின்புறத்தில் கேஸ் சார்ஜ்டு இரட்டை ஷாக் அப்சார்பரை பெற்றுள்ளது.

கிளாசிக் ரகத்திலான ஜாவா மற்றும் நவீனத்துவத்தை பெற்ற ஜாவா 42 மாடல்களில் தற்போது முன்புறம் 280 மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் 153 மிமீ டிரம் பிரேக் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதல் வேரியன்டாக பின்புற டயர்களுக்கு டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் ஆப்ஷன் இணைக்கப்பட்டுள்ளது.

ஜாவா மோட்டார்சைக்கிள் விலை பட்டியல்

ஜாவா – ரூ. 1.64 லட்சம்

ஜாவா – ரூ. 1.73 லட்சம் (Dual Channel ABS)

ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.55 லட்சம்

ஜாவா ஃபார்ட்டி டூ – ரூ. 1.64 லட்சம் (Dual Channel ABS)

(டெல்லி விற்பனையக விலை)

Exit mobile version